பக்கம்:நற்றிணை-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 % ްޢަހ - நற்றிணை தெளிவுரை 218. தனியணுகக் கேட்பேனே? - பாடியவர் : கிடங்கில் காவிதி கீரங்கண்ணனர். தின; நெய்தல். துறை : வரைவிட்ை மெலிந்த தலைமகள் வன்பொறை எதிர்மொழிந்தது. ((து. வி.) களவு உறவிலே கூடிய காதலன் குறித்தபடி வரைந்து வந்து தன்னை மணந்து கொள்ளாததனலே தலைவியின் துயரம் மிகுதியாகின்றது. அது கண்டு ஆற்ருளாகிய தோழி, இன்னும் சிலநாட் பொறுத்திரு' என்று கூறுகின்ருள். அதனைக் கேழ்டதும், தலைவி தன் ஆற்ருமை தோன்ற அவருக்குக் கூறுவதுபோல அமைந்த செய்யுள் இது.) - ஞாயிறு ஞான்று கதிர்மழுங் கின்றே, எல்லியும் பூவிகொடியிற் புலம்படைந் தின்றே, வாவலும் வயின்தொறும் பறக்கும், சேவலும் நகைவாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும், மாயாக் காதலொடு அதர்ப்படத் தெளிந்தோர் 5 கூறிய பருவங் கழிந்தன்று-பாறிய பராரை வேம்பின் படுசின இருந்த o குராஅற்’கூகையும் இராஅ இசைக்கும்,' ஆன நோயட வருந்தி, இன்னும் தமியேன் கேட்குவென் கொல்லோ, 10 பரியரைப் பெண்ண அன்றிற் குரலே: தெளிவுரை : தோழி! ஞாயிறும் மேலைத் திசையி?ே இறங்கித் தன் கதிர்களும் மழுக்கம் அடைந்ததாய் உள்ளது. அதனலே, இரவுப்பொழுதும் பூவுதிர்ந்த கொடியினைப் போலத் தனித்துத் துயருரா நின்றது. வெளவால்களும் இடந்தோறும் பறந்து கொண்டிருக்கும். ஆந்தைச் சேவலும் தான் மகிழ்ச்சியினை மிகவும் பெற்றதாகி நகைக்குந்தோறும் தன் பெட்டையை அழையா நிற்கும். அழிவற்றதான காதலோடும் நெறிப்படப் பலவுங் கூறி என்னைத் தெளிவித்துப்போன காதலர் வரைந்து வருவதாகக் கூறிய பருவமும் மெல்ல மெல்லக் கழிந்து போகின்றது. இடை யிடையே பட்டுப்போன பருத்த அடிமரத்தையுடைய வேம்பின்து இலையுதிர்ந்த கிளையினிடத்தே தங்கிய குராஅலாகிய கூகையும் இரவெல்லாம் குழா கிர்கம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/54&oldid=774742" இலிருந்து மீள்விக்கப்பட்டது