பக்கம்:நற்றிணை-2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றினை தெளிவுரை 77 العـــلمذ فعنـ. தெளிவுரை: சிறுத்த கண்களையும் பெருத்த கைகளையும் கொண்ட யானையின், ஆணும் பெண்ணுமாகிய இரண்டின் இனம், தண்ணிய குளக்கரையிலே செறிந்திருந்த மலைப் பச்சை குழையுமாறு மெய்யுறத் தம்முட் புணர்ந்து கூடிய பின்னர், சோலையிடத்தேயுள்ள மலைவாழைகளைத் தின்பதை யும் வெறுத்தவாய், அதற்கு அயலதாயுள்ளதும், மூங்கில் முள்ளாலே வேயப்பெற்ற வேலியை உடையதுமாகிய சிறிய குடியிருப்பிலே யுள்ளவர்கள் அச்சத்தால் அலறுமாறு சென்று, சிவந்த அடிமரத்தையுடைய பலாவினது இனிய பழங்களே உதிர்த்துத் தின்னநிற்கும். அத் தன்மையுடைய பெரிதான மலைநாட்டிற்கு உரியவனே, நீதான் நெடுங்காலம் வாழ்வாயாக! எந்தைக்கு உரியதும், வேங்கையின் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் அகன்ற முற்றத்தை உடையதும், மலை யிடத்தே பொருந்திய பாக்கத்திலுள்ளதுமாகிய எம் மன. யகத்திலே இன்றிரவுட போதுமட்டும் நீதான் தங்கினையாய்ப் பிற்றை நாளிற் செல்வா.ாக! அதற்கு இசைவாபாயின், நின் மாலையினை அடையாளமாகத் தருவாயாக! சொற்பொருள் : சிறுகண்-சிறுத்துள்ள கண்கள். ஈரினம்களிறும் பிடியுமாகிய யானையினம். குளவி-மலைப்பச்சை; காட்டு மல்லிகை எனவும் கூறப்படும். தீண்டி’ என்றது அதன்பால் மெய்யுறக் கூடிக் களித்து என்றதாம். வாழை’ என்றது மலைவாழையினை. முணைஇ.வெறுத்து; முணைவு முனி வாகும் என்பது தொல்காப்பியம். வேரல்-மூங்கில்; வேரல் வேலி என்பதனை மூங்கில் முள்ளாலே வேயப்பெற்ற வேலி எனக் கொள்ளலும் பொருந்தும். செங்கால் பலவின்’ என் றது, செம்பலா எனக் குறித்தற் பொருட்டு. தாமம்-மாலை. "தாமம் நல்குக' என்றது, நின்னைக் கானது அலமரும் தலைவி அதனை அணைத்தாயினும் இன்புறுவள் என்றற்காம். முன்றில்-முற்றம். பாக்கம் குடியிருப்பு; கடற்கரையூர்க் குரிய பெயர், குறிஞ்சிச் சிற்றுார்க்கும் இங்கே கூறப்பெற்றது. விளக்கம் : உடலின் பெருமையை நோக்கக் கண், மிகவும் சிறுத்து உளதாதலின், சிறு கண் யானை' என்றனர். இரவில் தங்கிச் செல்வாயாக’ என வேண்டியது, பகற் பொழுதின் கண்ணே. இவளோடு கூடிக் களித்து நீதான் இன்புறுத்தின; இரவிலே இவள்தான் தனின்மயில் துயருற்ரு ளாய்ப் பெரிதும் நலிவள்; ஆதலின் இரவும் தங்கிப்போவாய்' என வேண்டுவதாகும். இதல்ை, 黑雲* அவள்படும் துயரத்தை நீக்குதற்குக் கருதினையாயின், அவளை ஊரறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/79&oldid=774769" இலிருந்து மீள்விக்கப்பட்டது