பக்கம்:நற்றிணை-2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f (ു t ്...; m m സന நற்றிணை தெளிவுரை " ۵۷ از امر 16 --- - - விளக்கம்: புன்னையங் கானலை நோக்கியதும், முன்பு கூடிய இடமாதலின், பழைய நினைவுகளாலே கலங்கித் துயருற்றனள்; அவளுேடும் ஆடற்குரிய துறையாதலின் அது நினைந்தும் மனம் வாடினள். காலம் மாலையாதலைச் செய்யுளின் அமைப்பால் அறிதல் வேண்டும். அறியவே, இஃது இரவுக் குறிக்கண் கூறுதல் என்றும் கொள்ளப்படும். இறைச்சிப் பொருள் சிறு வெண்காக்கை தத்தம் துணை யோடு பலரும் காணக் கூடிக் களித்து நீராடி இன்புறுதலைப் போலத் தானும் தலைவனை முறையாக மணந்து கடலாடி இன்புறவில்லையே எனக் கலங்குவாள் தலைவி என்பதாம். இதனைக் கேட்டலுறும் தலைவனின் உள்ளத்தே, களவு உறவைக் கைவிட்டு விரைய மணந்து கோடலே செய்யத் தக்கது என்னும் தெளிவு உண்டாகும். அவனும் அவள்பாற் கழியக் காதலன் ஆதலின், அதல்ை மணமும் விரைவில் கைகூடும் என்பதாம். 232, வோல் வேலிச் சிறுகுடி! பாடியவர்: முதுவெண்கண்ணனர்; முதுவெங்கண்ணனர் எனவும் பாடம்._திணை:-குறிஞ்சி. துறை: பகல் வருவான இரவுவா எனத் தோழி சொல்லியது. ((து. வி.) பதற்குறிக்கண்ணே வந்து ஒழுகுவாளுகிய தலைவனத் தோழி எதிர்கொண்டு, இரவுக்குறி நேர்வாளே Gurು இவ்வாறு, கூறுகின்றனள். அதுவும் இயலாமையைக் குறிப்பால் உணர்த்தித் தலைவியை வரைந்து கொள்ளுமாறு வலியுறுத்துகின்றனள்.) சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம் குளவித் தண்கயங் குழையத் தீண்டிச் சோல் வாழை முணஇ அயலது வேரல் வேலிச் சிறுகுடி அல்றச் செங்காற் பலவின் தீம்பழம் மிசையும் - 5 மாமல் காட தாமம் கல்கென வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை வியுக விரிந்த முன்றில் கல்கெழு பாக்கத்து அல்கி:ன சென்மே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/80&oldid=774771" இலிருந்து மீள்விக்கப்பட்டது