உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

அறமேயன்றி இன்பம் அன்று. மழை, எத்தனை நாள் மின்னிப் பெய்யவேண்டுமோ, அத்தனை நாளும் பெய்த பின்னர், அதற்குமேல் மழை பெய்தல் இல்லையாகவே, தன்னிருப்பிடம் செல்கிறது. அதுபோலத் தலைவியின் மனம் எத்தனை நாள் அவளுக்கு ஆறுதல் எண்ணங்களைத் தூண்ட முடியுமோ, அத்தனை நாளும் அவளுடன் இருந்து, பின் ஆற்ற முடியாத நிலையிலே, தலைவனே புகல் என அவனிடம் செல்கின்றது. இவ்வாறு தலைவி கூறும் கூற்று, ஆற்றாமையை மிக அழகாகப் புலப்படுத்துவதாகும். செம்பைக் கடையும்போது பொரிகள் பளபள எனப் பறப்பதுபோல. வானம் மின்னும் என்பது உள்ளதை உள்ளபடி உள்ளமுவக்கக் கூறும் உயர்வுடையதாகும்.

"குணகடல் முகந்து குடக்கேர்பு இருளி
மண்திணி ஞாலம் விளங்கக் கம்மியர்
செம்புசொரி பானையின் மின்னிஎவ் வாயும்
தன்தொழில் வாய்த்த இன்குரல் எழிலி
தென்புல மருங்கில் சென்றற்றாங்கு
நெஞ்சம் அவர்வயின் சென்றென ஈண்(டு) ஒழிந்து
உண்டல் அளித்தென் உடம்பே; விறல்போர்
வெஞ்சின வேந்தன் பகையலைக் கலங்கி
வாழ்வோர் போகிய பேரூர்ப்
பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே." (நற்.158)

அந் நாளைய தமிழர், பொருளில் ஈடுபட்டுச் சுவைமிகுந்த பகுதிகொண்டு பெயரிட்ட மற்றொரு பாடலைமட்டும் கூறி மேற்செல்வாம்:

"புறந்தாழ்பு இருண்ட கூந்தற் போதின்
நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண்

126