உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் பேசிய நாடகம்

உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும்;
செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யா மையோடு இளிவுதலைத் தரும்என
உறுதி தூக்கத் தூங்கி அறிவே
சிறிதுநனி விரையல் என்னும்; ஆயிடை
ஒளிறுஏந்து மருப்பின் களிறுமாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல
வீவது கொல்என் வருந்திய உடம்பே." (நற்.284)

உலகில் பெருமக்களிடையே எழும் போராட்டத்தைக் குறிக்கின்றது இப்பாடல். அறிவு ஒரு புறம் இழுக்கின்றது. உணர்ச்சி ததும்பும் நெஞ்சம் மற்றொரு புறம் இழுக்கின்றது. தலை கொழுத்து நெஞ்சுலர்ந்து நிற்கின்ற உலக மன்றோ இன்று போரிடை மடிகின்றது! தலை சிறுத்து நெஞ்சு பெருத்த உலகம் பிறர்க் கடிமையாகிச் சாகும். பெருமக்களிடையோ பேரறிவும் பேருணர்ச்சியும் ஒருங்கே இயைந்து நிற்கக் காண்போம். தலைமகன் என்றால் அவ்வகையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் அல்லனோ? இவ்விரண்டினிடையே செயற்படும் ஊக்க நிலையும் விளங்கவேண்டும். அறிவும் உணர்வும் செயலும் அழகாக அமைந்த நிலையே முத்தமிழ் நிலை என உணர்தல் வேண்டும். அத்தகைய முத்தமிழ் நிலையில், உடம்பு, உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இயையச் செயல் செய்துவரும் ஓர் அருமையை இந்தப் பாடல் விளக்குகிறது. தலைவன், தலைவியின் கூந்தலே அணையாகக் கொள்ள, அவள் அன்பெலாம் மலரத் தன்னைக் கண்ட பார்வையைத் தலைவன் மறக்கின்றான் இல்லை. பிரிந்துவந்து பொருள் ஈட்டும் இந்த நிலையில் அப்பார்வை வந்து இவனை மருட்டுகின்றது. தானும் அவளும் ஒருவரே

127