உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் பேசிய நாடகம்

கண்ணுவரை விட்டுப் பிரிகையில், அங்கே, தான் நீரூற்றி வளர்த்த செடிகளோடு எல்லாம் உறவு கொண்டாடுவதை,சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் பெரிதும் பாராட்டி இயற்கையனைத்தையும் உறவாகக் கொள்ளுகிற இந்தியரின் பேருள்ளத்தை எண்ணி எண்ணி வியக்கின்றார். அத்தகைய பேருள்ளம் தமிழ்ப்பேருள்ளமேயாகும். நீரூற்றி வளர்த்தாள் சகுந்தலை. பாலூற்றி வளர்த்தாள் தமிழ் மகள் ; அவ்வுறவைத் தான்மட்டுமன்றித் தன் மகளும் கொண்டாடுமாறு வாழ்ந்துவந்தாள். மணலில் கொட்டை முதலியவற்றை மறைத்துவைத்துப் பின் மணலை வரிந்து இரு கையையும் கோத்து வரிமணல்மேல் வைத்து ஒருத்தி இருப்பப் பிற மகளிர் அக்கொட்டையிருக்கும் இடத்தில் கை வைத்தெடுக்கும் விளையாட்டு, இன்றும் தமிழ்ச் சிறுமிகள் மிக மகிழ்ந்து விளையாடுவது ஒன்றாகும். அவ்வாறு விளையாடிய தமிழ் மகள் ஒருத்தி, புன்னைக் கொட்டையை மணலிலேயே மறந்துவிட்டுச் சென்றாள்; அது, முளைவிட்டு வளரத் தொடங்கியது; தன் குழவி எனப் பேசத் தொடங்கினாள்; பாலும் நெய்யும் ஊற்றி வளர்த்தாள்; பின்னே, மணமகளானாள்; மகளிரையும் பெற்றாள்: இம்மகளிரோ புன்னையேபோல விட்ட இடத்திலே ஆர அமர நில்லாமல், ஓடிஆடிப் பானையை உடைத்தும் பாலினை உருட்டியும் பிற குழவிகளை அலைக்கழித்தும் வந்தனர். அந்நிலையில் அவர்கள்மேல் சிறிது சினந்தோன்ற நிற்பவள், தன் முதற் குழவியான புன்னை, விட்ட இடத்திலேயே வேரூன்றியதைப் புகழ்ந்தாள். இவ்வாறு பன்முறை வற்புறுத்தியதைக் கேட்ட மகளும், அப்புன்னையைத் தன் தமக்கையாகவே நம்பி வாழ்ந்தாள்; பின்னொரு நாள், தன் தலைவனோடு கூட வருகையில், அப்புன்னை தன்னுடைய தமக்கை-

133