உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

யாகலின் அப்புன்னை நீழலில் தலைவனோடு நகையாடவும் நாணிநின்றாளாம். உறவாடுதல் எத்துணை தொலைவு சென்றுள்ளது கண்டீர்களாக !

"விளையா(டு) ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினுஞ் சிறந்தது நுவ்வை ஆகும்" என்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்க நீநல்கின்
நிறைபடு நீழல் பிறவுமார் உளவே" (நற்.172)

என்ற பாட்டில் உயிர்களை எல்லாம் உறவாய்க்கொண்டு பாராட்டும் உயிரன்பின் ஒருமைப் பாட்டை யாரே வியவாதவர்!

இவர்கள், செல்வம் எனக் கொண்டதும் இவ்வுயிரன்பின் ஒருமைப்பாட்டுக் கொத்ததேயாம்.

"நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வ மன்றுதன் செய்வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கட் செல்வம் செல்வம்என் பதுவே" (நற்.210)

என வருவதன் உயர்வைத் தமிழர் அறிந்தின்புறுவாராக!

7

அன்பு என்றால் வெறுங்காதலன்று; உணர்வும் அறிவும் உணர்ச்சியும் இயைந்ததொருநிலையே; அன்பாயினார் ஒன்றாகின்ற நிலை. நிலத்திலே பொழிந்த மழைநீர் அந்த

134