உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

தினைக் கதிரின் கொழுமை—இலைகளின் நீட்சி—பலாவின் செழுமை—மரங்களின் உயர்ச்சி—அடர்த்தி—இவை எல்லாம் நிலத்தின் வளம் என அவன் அறிவான். ஆனால், அவர்களோ இவை அனைத்தும் அறத்தின் கொழுமை—கற்பின் விளைவு — அன்பின் உயர்வு — இன்பத்தின் அடர்த்தி—நேர்மையின் நீட்சி என்று கருதுகின்றார்கள். இக் கருத்து அவனுக்கு இப்போது நன்கு விளங்குகிறது. "நன்மலை நாடன்" என்று தோழி கூறியதின் பொருள் தெளிவாகிறது. "நன்மையே, அறமே, கற்பே, அன்பே இந்த வளம் அனைத்தும்" என்று தோழி கூறியதின் உட்பொருள் அவன் உள்ளத்தே உறைக்கின்றது. "நல்வாழ்வு வாழக் கற்பு நெறியில் உடனே மணஞ் செய்யத் துணியாது போனேனே!" என வருந்துகிறான் அவன்.

7

"தினை அறுத்தல், தினை கொய்தல்" என்பது வயிறு வளர்ப்பார் பேச்சு. இயற்கையோ டியைந்து வாழும் இக்குறவர்களும் தினையுண்டுதான் வாழ்கின்றனர். ஆனால், அவர்கள் தினையறுப்பது ஏன்? அவர்கள், தினையின்கால் தினைக்கதிரின் கொடுமையால் வளைந்து செம்மைநிலை கோணி வருந்துவது காண்கின்றார்கள்; அந்தக் கொடுமைக் கோணலை நீக்கிச் செம்மையாக்கி இன்பம் கொடுக்க அறுவடை செய்கின்றனர். அன்பும் அறச்செம்மையும் அவர்கள் உள்ளத்தைக் குழைக்கின்றன; உணவும் ஊட்டுகின்றன. அத்தகையது அவள் பிறந்த குடி.

"ஓரறிவுயிராம் தினையொடும் ஒத்துத் துடிக்கும் அவர்கள் நெஞ்சம் குழந்தைகளோடு குழைந்து குழவி நெஞ்சமாகிறது. குழவிகள் ஆடும் முற்றத்தில் குழந்தைக-

10