உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீயோ அறிவாய்

ளோடு குழந்தைகளாய் மாலையில் அமர்ந்த அவர்கள் விளையாடுகிறார்கள். வாழ்வின் இன்பம் அஃது. அவர்கள் பண்பாடு இவ்வாறு குழவிகளோடு ஆடும் முகத்தான் தலைமுறை தலைமுறையாக அழியாது அவர்கள் குடியில் ஓங்கி வளர்கிறது. அத்தகைய பண்பாட்டில் பிறந்ததுமுதல் விளையாடிவருகிறாள் தலைவி. என்னே இவர்கள் கல்வி முறை! விளையாட்டுக் கல்வி முறை!

"மரங்களும் நீளுகின்றன: கிளைகளும் நீளுகின்றன; இவர்களுக்கு நிழல் கொடுக்க, வளங் கொடுக்க நீளுகின்றன. இயற்கையும் மக்களுமாம் இயைபு இத்தகையது. இவற்றிடையே வானத்தில் கருமுகில்கள் மழையை நினைப்பூட்டி இன்பமாய் ஓடுவதும் தெரிகின்றது. இருட்டில் எவ்வாறு தெரியும்? மின்மினிப் பூச்சியின் ஒளியில் தம் மனத்தைக் குழந்தைகள்போலப் பறிகொடுக்கின்றார்கள் குறவர்கள். அன்புக்கண் காணும் காட்சி இஃது. அங்கே சிற்றொளியும் பேரன்பொளியாம். பெரிய மந்தையுள்ளும் தன் கன்றைத் தாய்ப் பசு பிரித்தறிவது அன்புக்கண் கொண்டன்றோ?

"தினை கொய்வதற்கு அவர்கள் நாள் பார்க்கும் முறையும் இதுவே ஆம். இயற்கையே நாள் வைத்துக் கொடுக்கிறது. இயற்கை வாழ்வு வாழ்வார்க்கே இந்த நுட்பம் தெரியும். நாகரிக வாழ்வு வாழும் யான் இதனை 'அறியாமை' என இகழ்ந்தேன்! இன்றறிவேன் இந்த அறிவின் நுட்பத்தை. இயற்கையோ டியைந்து முனைப்பற்ற நிலையில் தோன்றும் விளக்கம் இது.

"மின்மினிப் பூச்சி வழியேக் கருமுகிலைக் காரிருளில் காணும் இவர்கள் சிறிது அலர்—பழிச்சொல்—எழினும்

11