உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

உண்மை உணரும் உணர்வு பெற்றவர்கள். ஆனால், வெறுப்போ தண்டனையோ இல்லை. தினைத்தாளைச் செம்மையாக்கத் தினையை வீடு சேர்க்கின்றனர். தினைத் தாளாய்த் (தலைவியின் ஆணிவேராய்த்) தினையைத் (தலைவியைத்) தாங்கியது (தலைவன்) தாள் செம்மை யுற்று (கற்புநெறி) வாழத் தினையைத் (தலைவியை) வீடுகொண்டு சிலநாள் பிரித்து வைப்பது குறவர் பெருநெறி செம்மையுற வாழ்வதே கற்புநெறி. தினை கொய்யும் காலமே வேங்கை மலரும் காலம். களவு நெறி முடியும் காலமே கற்பு நெறி மலரும் காலம். வேங்கை மலரும் காலமே குறவர் மணவிழாக் கொண்டாடும் காலம்."

" 'அன்புச் சமுதாயம் அன்பின் தலைவியை வாட விடாது ; அன்பு வழிச்சென்று இயற்கை நெறியை உணர்ந்து குடிமரபிற்கேற்ப மணப்பதே முறை' எனத் தோழி கூறிய கருத்து அன்று விளங்கவில்லை. 'தினை அறுத்து, வேங்கை பூத்துக் குலுங்கும் நாளில், மணம் நடைபெறுவது இயற்கையோடியைந்த அவர்கள் இயற்கை வாழ்வின் சிறப்பு' என்று அவள் கூறாமற் கூறியதனையும் அன்று நான் அறியவில்லை. இன்று தெரிந்துகொள்கிறேன் நான்; மணம் செய்துகொள்ளத் தூண்டியதனை அறியாமற்போன என் அறிவின்மை என்னே!" எனக் கழிவிரக்கம் கொள்கிறான்.

8

அவன் உள்ளத்தில் ஒரு புரட்சி எழுகிறது. அவன் மாறுகிறான். முன்னும் அன்பு ஆனவனே அவன்.

ஆனால், அன்பின் பெருமையை — உண்மை வடிவை

12