உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நப்புன்னை

யாடலாம். ஆளுக்கு ஒரு கொட்டை பொறுக்கி வாருங்கள்' என்று வள்ளி சொன்னதும் சொல்லாததும் சிறுமியர்கள் தோட்டம் முழுதும் பரவுகின்றனர்; பாக்கு, புன்னைக்கொட்டை, புன்கம்கொட்டை, நெல்லிக்கொட்டை என்று எத்தனையோ வகையான கொட்டைகளைப் பொறுக்குகின்றனர்; ஆளுக்கு ஒன்றாகக்கொண்டு ஓடிவருகின்றனர். அவர்களுள் ஒரு பெண், 'என்னவள்ளி! நேற்றுப் பாப்பா விளையாட்டு என்றாய் ; இன்றுமறந்துவிட்டாயா? கொட்டை பொறுக்கச் சொன்னாயே!' என்று கேட்கிறாள். மற்றொரு பெண், 'வள்ளியா மறப்பாள்? புறா முட்டையை நீ தள்ளி உடைத்தாயே! அப்போது அத்தான் என்ன சொன்னார்? புறாப் பாப்பாத்தான் புறா முட்டை என்று சொல்லவில்லையா? இந்தக் கொட்டை எல்லாம் பழத்துக்குள் இருக்கிற மரங்களின் முட்டை என்று வள்ளி சிரிக்கவில்லையா? கொட்டைகள் தாம் மரப் பாப்பாக்கள்' என்கிறாள்.

" 'மரப் பாப்பா, மரப் பாப்பா!' என்று எல்லாச் சிறுமிகளும் கொட்டைகளை அணைத்துக்கொண்டு பாடி ஆடுகிறார்கள்.

" 'சில நாட்களுக்கு முன்னர்ப் பரப்பிய மணல், தோட்டத்திற்குப் புது மெருகிட்டாற்போல இருக்கிறது. நிறையப்பூக்கள் பூத்து உதிர்வதால் மணலும் மகரந்தமும் மட்கிக்கலந்து மணப் பொடி பரப்பியதுபோலக் கிடக்கின்றன. சிறுமியர் இந்தப் பரப்பில் விளையாட வருகின்றனர். ஒவ்வொருவரும் தத்தம் மரப் பாப்பாவுக்கு 'நெல்லி அப்பன்,' 'பூவரசன்,' 'மாம்பழ நங்கை,' 'கமுகம்மை' என்று கொஞ்சிக் கூவிப் பெயரிடுகின்றனர். வள்ளி கொண்டுவருகிறது புன்னைக் கொட்டை. இதுதான் அவள்

23