உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

மகள். வள்ளியின் மகளை, வந்திருந்த முருக அத்தான். 'நப்புன்னை' என்று செல்வப் பெயரிட்டு அழைக்கின்றான். எல்லாரும் கைகொட்டி ஆரவாரம் செய்கின்றனர்.

" 'வள்ளி! விளையாடுவது எப்படி?' என்று விளையாடத் துடிதுடிக்கும் சிறுமியர் கேட்கின்றனர். 'வள்ளி நான் சொல்லலாமா?' என்கிறான் முருகன். 'சொன்னால் என்ன?' என்கிறாள் வள்ளி. 'சிவப்புப் பெண்கள் எல்லாம் ஒரு கூட்டம்; கறுப்புப் பெண்கள் எல்லாம் ஒரு கூட்டம்' என்று சொல்லத் தொடங்கியதும், 'அத்தானுக்கு எப்பொழுதும் விளையாட்டுத்தான்' என்று பெண்கள் கூப்பாடு போடுகின்றார்கள். 'இப்படி இரைந்தால் நான் ஒன்றும் சொல்ல முடியாது' என்று திரும்பிப் போகப் பார்க்கின்றான் முருகன். 'இல்லை! இல்லை! அத்தான், சொல்லுங்கள்' என்று சிறுமியர் பேசாமல் இருக்கின்றனர். "கறுப்புக் கூட்டமே தோழிமார் கூட்டம்; சிவப்புக் கூட்டமே தாய்மார் கூட்டம். தத்தம் குழந்தையைத் தத்தம் தோழிகளிடத்துக் கொடுத்துவிட்டு ஒளிந்துகொள்ளவேண்டும். தோழிமார் ஒவ்வொரு கொட்டையையும் தனித்தனியே மணலுக்குள் மூடி மறைக்கவேண்டும். 'குவால் குவால்' எனக் குழந்தை கத்துவதுபோல் தோழிக் கூட்டம் கத்தவேண்டும். கத்தியதும் தாய்க்கூட்டம் வெளிவந்து தேடவேண்டும். யார் முதலில் தன்னுடைய குழவியை எடுக்கிறாளோ அவளுக்குத் 'திருத்தாய்' என்ற பட்டம் சூட்டவேண்டும். பூவை மாலையாகக் கட்டி மாலையிடவேண்டும்: இதுதான் விளையாட்டு' என்று சொல்லி முடிப்பதற்குள் ஒரு பெண், 'யார் மாலை இடு' வது? அத்தானா?' என்று சிரிக்கிறாள்.

24