உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எல்லாம் அவளுக்கே

அங்கே! பெருமை வாய்ந்த துடி போன்ற இடையில் மேகலை ஒலிக்கின்றது இங்கே! சென்றதும் வெற்றி அங்கே! கண்டதும் காதல் இங்கே! உம்-உம்-உம். விளக்கம் சரிதானே !" எனச் சிரிக்கின்றான்; சிரிப்புக் காட்டுகின்றான் பாங்கன்.

"பாங்கா, இதுவா உன் நட்பு? நீ சொல்வது சரி; ஆனால், சிரிப்பது ஏன்? புண்ணில் கோல் விடாதே!"

"இடுக்கண் வருங்கால் நகுக."

"நண்பா, இதற்கு ஒரு வழி இல்லையா ?"

உள்ளம் எல்லாம் உருகி உயிரெலாம் உருகி வரும் இந்தக் குரல் பாங்கன் மனத்தில் பாய்கிறது. பாங்கனுக்கு ஒன்றும் தெரியவில்லை. அவன் வெறிக்க வெறிக்கப் பார்க்கிறான்; "கலங்காதவன் கலங்குகிறான். கருத்தறிந்து செய்தல் வேண்டும்" என்று முடிவுசெய்கிறான்.

"உனக்கு யான் என்ன சொல்வது? நான் போய்ப் பார்த்து வருகிறேன்" என்று போகிறான் பாங்கன்.

5

இப்படிப் பாங்கனிடம் அவளது வெற்றியைப் பேசியது அவன் நினைவுக்கு வருகிறது. இவ்வளவு செயற்கருஞ்செயல் செய்தபின் அவளாக இனி என்ன செய்யக்கூடும்? அவளும் அவனும் பிறர் அறியாமல் கூடவேண்டும். அதற்கோ பிறர் கண்ணை மருட்டும் சூழ்ச்சிவேண்டும். உலகறிந்த ஓர் அறிவு வேண்டும்; தம்மோடு ஒத்துத் துடிக்கும் நெஞ்சு வேண்டும். அரசன் வென்றபின் அமைச்சரே அமைதியை நிலைநாட்டவேண்டும். அரசனுடைய கண்ணும் உயிரும் அமைச்சரே. அவளுடைய உயிரும்

37