உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

" 'தோல்வியே காணாத என் மனம் தோற்றது. அறிவு, ஓர்ப்பு, நிறை, கடைப்பிடி—அறிவு, ஆராய்ச்சி, மறை பிறர் அறியாமல் ஒருநிலை நிற்கும் மன நிலை, குறிக்கோள் தவறாது கடைப்பிடித்து நடக்கும் உள்ளத்து உறுதி—இவையே என் உள்ளக் கோட்டைகள்' என்று எண்ணி இறுமாந்திருந்தேன். அனைத்தையும் கைப்பற்றிக்கொண்டு தகர்த்தெறிந்தாள். அறிவா? ஆராய்ச்சியா? நிறையா? உறுதியா? எல்லாம் அவளே !"

"இப்படி வெற்றி பெற்றார் யார்? அவள் ! அவள் ! அவளே !"

"என்ன அழகு! கல் நெஞ்சினையும் கரைத்து உருக்கும் அழகு! கண்டேன் அவளை! ஒரே மின்வெட்டு! இடையில் கட்டிய மணிமேகலையின் மெல் ஒலி! ஆம், வெற்றி ஒலி அஃது! எனது எல்லாம் அவளது ஆயிற்று. நானே அவளில் ஒடுங்கிவிட்டேன். அவளே அடைக்கலம். நான் எங்கே? அவளே நான்."

"இந்தப் போக்கினை மாற்றச் சிரிக்கலாமா?" என்று நினைக்கிறான் பாங்கன்; சிரிக்கிறான்.

"ஹ் ஹ் ஹ்! உன்னிடம் கற்ற கல்வியினை உன்னிடமே காட்டலாமே...ஆம், உன் கற்பனையை விளக்கவா...?"

"மலை நாட்டான் மலையமான். மலை நாட்டாள் மாதரசி. மா—குதிரை—ஏறிப் பாய்கிறான் மலையமான்.மா—அழகு—ஏறி வெல்கிறாள் மாதரசி."

"புலையன் அங்கே; புல்லியது — நுண்ணியது; நுண்ணிடை இங்கே. பெருந்துடி கொட்டுகிறான் புலையன் அங்கே. இங்கோ துடி—துடி போன்ற இடை; பெருந்துடி—பெருமை வாய்ந்த இடை. பெருந்துடி கறங்குகிறது

36