உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எல்லாம் அவளுக்கே

அவ்வாறு அனுப்பி ஓய்வு கொண்டு பெரு மூச்சு விடுவதுபோல நிற்கின்றாள் அவள்; இவளே எல்லாம் செய்வாள் என்ற நம்பிக்கையால்—ஆனால், இவளோ......" என்று இழுத்துக்கொண்டே பேசுகிறான்—தோழி காதில் விழத்தான் பேசுகிறான். ஆனால், பேசுவதோ நெஞ்சோடு.

7

உடையும் மனத்திற்கு ஓர் ஆறுதல் மருந்து தோன்றுகிறது. இது கேட்டுத் தோழியும் உதவ முந்துற முந்துவாள். அவள் அவனோடு ஓருயிராய் ஒற்றித்துப் போன நிலை, அவள் இருப்பிலேயே—அவள் பார்வையிலேயே, ஒளிர்கிறது. அவன் கண்ட காட்சியை நினைப்பூட்டிக்கொண்டு உரக்கத் தனக்குத்தானே நெஞ்சொடு பேசி விளக்குகிறான். உள்ளீடானது இப்படி வெளியீடாகிறது. அதுதானே பாட்டு. தோழிக்கும் கேட்கிறது. உணர்வினில் வல்லோர் பாடினால் உணர்வினில் வல்லோர் உள்ளவாறு உணர்வர்.

அவன் அவளொடு கூடிய நாளின் காட்சி.....

அறிவும் அன்பும் இன்பமும் ஒளிரும் பரந்த அவளது நெற்றியை மறக்க முடியுமா அவன்?

அவனொடு மகிழ்ந்தபின் தோழிமாரொடும் செல்கின்றாள் அவள். அவள் பின்னழகு கண்டு ஈடுபடுகிறான் அவன். இந்தக் குறுமகளா அந்த ஒண்ணுதல்! அவன் கண்ட அறிவின் பிழம்பு! அன்பின் வடிவம்! இடையில் உடையைக் கீழே தாழ உடுத்திருக்கிறாள் அவள்; திரும்பித் திரும்பி அவனைப் பார்த்துக்கொண்டே நடக்கிறாள்; உடை தடுக்கிறது; தெற்றுகிறாள்; காலில் சிக்கிய உடைமேல் கால் வைத்து நடக்கிறாள். பின்புற உடல் இடையின்

39