உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

கீழ்ச் சிறிது வெளியாகிறது. பின்னழகு பேரழகின் ஒளியாக — அழகெலாம் ஒருமுகப்பட்டு ஒளிரும் ஒளித்திவலையாகத்—திதலையாகத் தோன்றுகிறது. ஓரிமைப் போதுதான் — உடனே உடையைத் திருத்திக்கொள்கிறாள் — அதற்குள் அவ்வாறு மின்னிய அழகில் உள்ளத்தைப்பறி கொடுக்கிறான்; மறக்க முடியாத காட்சி?

அவனை அணைத்த கைகள்—அவைகளை வீசி நடக்கின்றாள். வளை ஒலி இல்லை. அகன்ற தொடி உண்டு. அதோ தெரிகின்றன ! ஒலியின்றி இறுகச் செறிந்து முன் கையில் அழகு ஒளி வீசுகின்றது. அகன்ற தொடியும் இறுகத் தழுவ அன்பு வீங்கி நிற்கின்றாள். " அவள் தொடி செய்த தவமும் செய்யவில்லை நான், அப்படிச் செறிந்து நிற்க.” என்று அவனது அடிமனத்தே ஒரு குமுறல் எழுகிறது. உயிர்த் தோழியின்மேல் முன்கையை வைத்து நடக்கிறாள் அவள்; தோழியைப் பற்றிக்கொள்கிறாள். உணர்ச்சியால் அலையுண்டவளுக்கு அத்தகைய ஊன்றுகோல் வேண்டியிருக்கிறது.

அந்தத் தோழிதான் அவள் உயிர் எனத் தோன்றுகிறது, அவனுக்கு. அத் தோழியை அப்படிக் காட்டிக்கொடுக்கின்றாளா?

8

அன்று கண்ட காட்சி அஃது. இன்று காணும் காட்சி சிறிது மாறி உள்ளது. இன்றும் பின்னழகு காண்கிறான்! திரும்புகிறாள் அவள்; அவனை எதிர்பார்த்துத்தான் திரும்புகிறாள். அதோ அறிவு ஒளிரும் அவள் நெற்றி! முன்கை வீசி நடக்கிறாள். முன் கேளாத 'கலகல' ஒலி—ஆம்—வளை ஒலி இது—பழைய தொடி இல்லையா? அவை

40