உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. புது மணப் பெண்

இரவெல்லாம் இவளுக்குத் தூக்கமே வரவில்லை; அவனுக்குத் தெரியாமல் இருக்கப் படுக்கையில் உறங்குவதுபோலக் கண்ணை மூடிக்கிடக்கின்றாள். கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும், அவன் போகப்போகும் காட்டின் கொடுமை எல்லாம் பட்டப்பகல் வெட்ட வெளிச்சமாகத் தோன்றுகிறது. அவன் வெயிலில் துடிக்கிற துடிப்பு இவளைத் தூக்கிவாரிப் போடுகிறது. இவள் நடுநடுங்குகிறாள்; அலறுகிறாள். 'உறங்குகிறாள்' என்று வெளியே சென்று, பயணத்துக்கு முன்ஏற்பாடாக மூட்டை முடிச்சுக் கட்டிக்கொண்டிருந்தவன், அலறுதல் கேட்டு உள்ளே வருகிறான்; "என்ன கண்ணே !" என்கிறான். “ஒன்றுமில்லை; கெட்ட கனவு" என்று கண்ணை மூடிக்கொண்டு இவள் மறுபக்கம் திரும்பிக்கொள்கிறாள்.

அன்றிரவு அவளுடைய உயிர்த் தோழி வந்திருக்கிறாள்; பயணத்திற்கு வேண்டுவனவற்றை உடனிருந்து

47