உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புது மணப் பெண்

என்ன புரண்டுபுரண்டு முகம் வீங்கிக் கிடக்கிறாய்! ஏன் இப்படி? வா! தோட்டத்தில் சிறிது உலவி வரலாம் " என்று கூறிக்கொண்டே, தோழி மூலையில் உள்ள தண்ணீர்த் தாழியில் மலர விட்டிருக்கும் குவளைப் பூவை எடுத்து அவள் கண்ணை ஒற்றித் துடைக்கிறாள்; பூவை அவள் தலையில் சூடி விடுகிறாள். மேற்கே இறங்கிக்கொண்டிருக்கும் திங்களின் நிலவொளியில் தோட்டம் அழகாகத் தோன்றுகிறது. வேப்ப மரத்தின் அடியில் வலை வைத்தது போன்ற நிழலில் இருவரும் அமர்கின்றனர்.

2

"அடுத்த ஊரில் உள்ள செல்வர்கள் வெருட்டி விட்டார்களாம். பாவம்! பட்டினியால் மெலிந்த சிறுவன், நீ படுத்தவுடன் இங்கே வந்தான். அவர்தம் பயணத்திற்குக் கட்டிய மூட்டையை அவிழ்த்து அவன் பசியை ஆற்றினார்" என்று பேசத் தொடங்குகிறாள் தோழி.

"எனக்குத் தெரியும். நான் தான் தூங்கவில்லையே! இல்லை என வருவார்முன்னே இல்லை என்பது, உயிர்போவதுபோலப் பெரு வருத்தமாகிறது."

"எத்தனைக் கீழ் மக்கள்—எவ்வளவு செல்வமாக வாழ்கிறார்கள்! யாருக்குப் பயன்? உங்களிடம் அத்தகைய செல்வம் கொழித்த லாகாதா? பழைய குடி! அழகிய வீடு! ஆனால், சிறு வீடு! வயிற்றுக்குக் குறைவில்லை. இருந்தாலும், பட்டினி மக்களோடு பங்கிட்டுப் பட்டினி கிடக்கத்தான் பிறந்தோமா? வள்ளன்மை உள்ளத்திற்கு, ஏற்ற வருவாய் இல்லையே! இதனால், நீங்கள் வருந்தும் வருத்தத்தை உங்கள் வாயும் அறியாது; எண்ண அலைகள்

49

4