உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

அமைத்து அப் பாடல்களை நன்கு விளங்கிக்கொள்ளும் வகையில் உயர் திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் சிறந்ததொரு தமிழ்த்தொண்டு ஆற்றியிருக்கின்றார். இந் நவமணியுள் ஒவ்வொன்றன் சிறப்பையும் தனித் தனி எழுதிக்காட்டுதல் வேண்டா. ஒளியும் சுவைமிகுதியும் ஒவ்வொன்றிலும் உண்டு. படித்துச் சுவைக்க முற்பட்டுவிட்டால் தங்கு தடையின்றி முழுதும் சுவைத்து விட்டே நூலைக் கீழே வைக்கத்தோன்றும் என்ற அளவு நூலின் சிறப்பைப்பற்றிக் கூறினால் போதும் என்று கருதுகிறோம்.

இந்நூலைத் தமிழ்மக்கள் அனைவரும் விரும்பி ஏற்பார்கள் என்பது திண்ணம்; ஏற்பின், இதனால் பெரும் பயன் அடைவர் என்பதும் திண்ணம்.

தொடுமிடந்தொறும் சுவைநயம் தோன்ற ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு சிறு நாடகமாக அமைத்துத் தந்த திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் நீடு வாழ்க! இவற்றொடு நின்றுவிடாது. நற்றிணையில் உள்ள எல்லாப் பாடல்களுக்கும் இங்ஙனமே திரு. தெ. பொ. மீ. அவர்கள் சிறு நாடகங்கள் எழுதித் தமிழ்மக்கள் அனைவரையும் நூலில் திளைக்கும்படி செய்வார்களாக! வாழ்க நற்றிணை ! வாழ்க தமிழ்மொழி !

சென்னை,

இங்ஙனம்,
தெ. பொ. மீ.
வெள்ளிவிழாக் குழுவினர்.

4-12-1945.