உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

டிலகும் உயர்திருவாளர் பழனியப்பச் செட்டியாரவர்களிடம் அறிமுகப்படுத்திவைத்தார்கள். தம்முடைய இயல்பான இனிமைப் பண்பில் உயர் திருவாளர் பழனியப்பச் செட்டியாரவர்கள் எங்கள் செயலைப் பாராட்டிப் பேராசியர் எழுத்துக்கள் அனைத்தையும் வெளியிட இசைந்து. முதலில் வள்ளுவர் கண்ட நாடும் காமமும் என்ற நூலை அச்சிட்டு, அடுத்து இரண்டாவதாக இந்நூலை விரைவில் அழகாக அச்சிட்டுத்தந்தார்கள். இவ்விரு பெருஞ்செல்வர்களுக்கும் நாங்கள் ஆற்றும் கைம்மாறு ஏதும் அறியோம். எல்லாம் வல்ல ஆண்டவன் அவர்கட்கு எல்லா நலங்களும் அளித்தல் வேண்டுமென அவ் வாண்டவனை வேண்டி அமைகின்றோம்.

இந்நூலின் சிறப்பினை வரையறை செய்து கூறுவது எம்மனோர்க்கு இயலாததொன்று. ஒப்புயர்வற்ற நூல் இஃதாகும் என்று கூறி அமைகிறோம்.

சங்க நூல்கள், பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் எனப்பகுக்கப்பட்டிருப்பதைத் தமிழர் அனைவரும் அறிவர். எட்டுத் தொகை எனப்படும் நூல்களுள் நற்றிணையே தலைசிறந்தது. எட்டுத் தொகை நூல்கள் இவை என்பதை ஒரு பழம் பாடல்,

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியே அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை

என்று இயம்புகிறது. இப் பாடலில் முதற்கண் வைத்து எண்ணப்பெறும் பெருமை நற்றிணைக்கே அமைந்துள்ளது. மேலும் குறுந்தொகை என்பதும் "நல்ல குறுந்தொகை" என்று சிறப்பிக்கப் பெற்றிருந்தாலும், 'நல்' என்ற அடைமொழி, பிரிக்க முடியாதபடி நற்றிணைக்கே பொருந்தியுள்ளது. இவ்விரண்டே சாலும் நற்றிணை எட்டுத் தொகையுள் தலைசிறந்தது என்பதற்கு. இந்நூலுள் நானூறு பாடல்கள் நன்மணிகளெனத் திகழ்கின்றன. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு சிறு நாடகமாக விரிக்கலாம். இம் முறையில் ஒன்பது பாடல்களைச் சிறு நாடகங்களாக