உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

"இல்லை, கண்ணே! இல்லை! என்றும் இல்லாத அழகு, இன்று உன் முகத்தில் ஒளிர்கிறது. அந்த ஒளியில், உன் ஒற்றையாரமும் கிளர்ந்து மின்னிப் பொலிகிறது. அன்னமும் தோற்கும் நடையை இன்றே கண்டேன்."

"என்னைப் பாடுவதாகச் சொல்லி, நீங்களே பாடத்தொடங்கிவிட்டீர்களா?"

"பாட்டாவது! கற்பனையா இது? முழுக்க முழுக்க உண்மை. உன் உடல் அழகினையே. இதுவரையில் கண்டேன்: அன்பாகக் கனிந்த உடலம் என அறிவேன். என்னையே உயிராகக் கொண்டு வாழ்கிறாய் என அறிவேன். ஆம்! வெற்றுடலையே கண்டு களித்துக் கண்மூடிநின்றேன். இன்றுதான் என் கண் திறந்தது. உன் உயிர் அழகினைக் காண்கிறேன்; அறமும் அருளும் கலந்த உள்ளத் தொளியினைக் காண்கிறேன். பெருமக்கள் வழிநின்று ஒழுகும் உன் கடவுள் வாழ்வினைக் காண்கிறேன். இவ் வாழ்வின் பெருமையை நீ உன் வாயாரப் புகழ, என் காதாரக் கருத்தாரக் கேட்கிறேன். இந்தப் பெருமை எல்லாப், என் ஆசிரியர் உன்னைக் கண்டவுடனே அறிந்துகொண்டார். அவர் வருகையில் எனக்கு ஒரு புதுப் பெண்ணைப் பெற்றெடுத்துத் தந்துள்ளார். என்னே என் அறியாமை இருந்தபடி! நீ ஒரு புது மணமகள். வெற்றுடலைக் கண்டு களித்து, அதன் மணவாளனாக இத்தனை நாள் அமைந்தேன். மாணிக்கக் கல் கையில் இருந்தும் அதனைக் கூழாங்கல் எனக் கொண்டு, அதனால் புது அடுப்பு மேடை தேய்த்த கதைதான் என் கதை. நீயே மாணிக்கம்; அதனை அறிந்த இன்றே நல்ல நாள்! ஆமாம் ! நீ ஒரு புது மணப் பெண். புதுமணம் செய்துகொள்ள வேண்டும். உன் குறு நடைக் கூட்டம் வேண்டும். நானும் புது மணமகனாக

62