உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புது மணப்பெண்

உன்னை உயிரறிய, உடலறிய, உள்ளம் அறிய, உள்ளத் திறைவனறிய, என் ஆசிரியர் அறிய மணக்கும் வாய்ப்பும் வருகிறதே..."

"என்ன, ஏதேதோ பேசுகின்றீர்கள்!" என நாணித்தலை குனிகின்றாள்.

"உண்மையே பேசுகின்றேன். தனக்கென வாழாப்பிறர்க் குரியாளராக நாமும் நம் குடும்பமும் வாழவேண்டும். ஆனால், நம் வாழ்வு இத்தகைய சிறு வாழ்வாக அமைந்து பயனில்லை. வருவார்க்கு அடையாப் பெருங்கதவம் படைத்த வீட்டில், வருவார் உண்டு எஞ்சியதனை, உண்பதே அமுதம் என்பது உனது உட்கோள். பஞ்சம் மிக்க நாட்டில் பட்டினி வாட்டுகின்றது. அதனைக் கண்டும் உணராது போனேன். அவ்வாழ்வு வாழச் செல்வம் வேண்டும். பஞ்சம் மிக்க நாட்டில் பொருள் ஏது? பிற நாடு சென்றே தேடுதல் வேண்டும். அருமை அன்று ! உண்மையும் உறுதியும் உண்டானால். அப் பொருள் வருமுன், உன் மனம் குளிர உன்னைப் புது மணமகளாக மணப்பது எங்கே? ஆமாம். பொருள் தேடி வருதல் வேண்டும். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை. அருள் வாழ்வுக்கும் பொருள் வேண்டும். இதனை உணராது போனேன்! புது மணப்பெண்ணுக்குப் பரியம் கொடுக்கத்தானே வேண்டும்! விருந்து வந்ததன் பயன் கண்டாயா?"


5

தோழி பேசுகிறாள்:

" 'இவ்வாறு நிகழ்ந்தது' என நீ கூறவில்லையா'? ஆம்! அந்தப் புதுப்பெண்ணை மணக்க வேண்டாவா? உடலாகக் கண்ட பெண்ணை, உயிராக, அருளாக, அன்பாக, அழகாக, அறிவாகப் பாட்டாகக் கண்டதும் வேறு பெண்-

63