உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

தானே? சாவாப் பெண் அன்றோ? இந்தப் புதுப்பெண்ணை அன்றோ தலைவர் காதலிக்கின்றார் ! மணக்க விரும்பினால், அந்த வேட்கை தணிய வேண்டுமன்றோ? சாவாப் பெண் வேண்டும் என்றால் தவம்தான் செய்யவேண்டும், அந்தத் தவம்தான் செய்யப் போகிறார். அதனை வருத்தம் என்று வருந்துவது ஏன்?"

"ஆம்! அவரது உயரிய எண்ணம் அஃது! ஆசிரியரும் அன்று வாழ்த்தினார்; செல்வம் வரும் நாளும் குறிப்பிட்டார். இன்னும் சில நாட்களே உண்டு. அவர் கூறியது பொய்யாது: அவர் முக்காலமும் அறிந்த அறிஞர் அல்லரா! அதோ பல்லியும் நல்ல செய்தி சொல்கிறது."

"இந்தக் காளை சிறுவீடு மேயப் போனது மிக விரைந்து மேய்ந்து திரும்பியது" என்று அயல்வீட்டு ஆயர் மகள் பேசிக்கொள்வது இவர்கள் காதில் விழுகிறது.

"கேட்டாயா இந்த நற் சொல்லை? விரைவில் நம் காளையாய தலைவரும் திரும்புவார். நீ அன்றோ நல்ல பெண்! பொழுது விடிவதற்கு முன்னரே தலைவர் புறப்பட்டு வெளிநாடு சென்று பொருளீட்டி வந்து, உலகெலாம் வாழ உன்னுடன் என்றென்றும் கூடி வாழ்வாராக!"

பல்லி முன்போல் 'டக் டக்' என்கிறது. "ஆமாம் நல்ல சகுனம்! தலைவரை மலர்ந்த முகத்துடன் வழியனுப்பு" என்கிறாள் தோழி.

கோழி கூவுகிறது. தலைவன் புறப்படுகிறான். தலைவியைத் தழுவி முத்தமிடுகிறான்."வாழ்க!" என்று பாடிக்கொண்டே தலைவன் வழிமேல் விழி வைத்துத் தலைவியைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே போகிறான். தலைவிக்கு

64