உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தினசரியா பாட்டு?

டைனாஸ்ட் (Dynast) என்ற நாடகம், காளிதாசன் எழுதிய இரகுவமிசம், சேக்கிழார் பாடிய பெரிய புராணம் முதலியன, கண்கட்டி விட்டாற்போல நாம் அலைந்துவரும் வரலாற்றுக் காட்டில், தெள்ளத் தெளிய விளக்கி நம் கண்ணைத் திறந்து வைக்கும் வரலாற்றுக் காப்பியங்களாகும். வரலாற்றினையே பாட்டின் உயிர்நிலையாக வைத்துப் பாடாமல், எடுத்துக் காட்டாகவோ உவமையாகவோ வரும் வரலாற்றுக் குறிப்புக்கள் இவ்வாறு பாட்டாதலில்லை: பொருள் விளங்காத துண்டு துணுக்குக்களாகவே அவை ஒழிகின்றன; பின் வருவாருக்கு விளங்காத பகுதிகளாய்ப் பாட்டினையே கெடுத்தொழிக்கும் புல்லுருவிகளாகவும் உயிருணிகளாகவும் மாறிவிடுகின்றன.

மாமூலனார் பரணர் முதலிய சங்கப் புலவர்கள் இத்தகைய உவமைகளை ஏறக்குறையத் தங்கள் பாடல் தோறும் பாடுகின்றார்கள். பாட்டோ இல்லையோ, இவற்றால் பெரியதொரு நன்மை விளைந்துள்ளது. ஒன்றுமே அறிய முடியாது கிடக்கும் சங்க காலத்தினைப்பற்றி அறிய இவையே உதவுகின்றன. சங்க கால வரலாற்றுக் கருங்கடலில், இவையே கலங்கரை விளக்கமாக விளங்குகின்றன. மற்றொன்றும் உண்டு. மொழிநடை மாறியுள்ளமை காரணமாகக் கற்றோருக்கு அன்றி மற்றோருக்கு விளங்காத நிலைக்குச் சங்கப் பாக்கள் வந்துள்ளன. கற்றோரும் சங்க கால வரலாற்றை ஒருவாறு அறிந்தாலன்றிச் சங்க நூல்களை அறிவது அருமை. எனவே, சங்க நூல்களை ஓதுவோர், ஏறக்குறையச் சங்க கால மன நிலையை அடைந்து தீரவேண்டும். முதலுலகப் போரின் சென்னை வரலாற்றுச் சிறப்பறிஞருக்கு (Specialists) எம்டன் குண்டினைப் பற்றிய பாட்டு விளங்குவதுபோல, சங்ககாலச் சிறப்-

71