உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

நற்றிணை தெளிவுரை


இப்படித் தன் உள்ளத்துயரை கூறுகின்றான்.]

அவள் நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால் நார் உரித் தன்ன மதனில் மாமைக் வளை யன்ன ஏந்தெழில் மழைக்கண் திதலை அல்குற் பெருந்தோள் குறுமகட்கு எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே! 'இவர்யார்?' என்குவன் அல்லள்; முனாஅது அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி எறிமட மாற்கு வல்சி ஆகும் வல்வில் ஓரி கானம் நாறி இரும்பல் ஒலிவரும் கூந்தல் பெரும்பே துறுவள்யாம் வந்தனம் எனவே! நீரிடத்தே. வளர்கின்ற ஆம்பலினது கேட்குமாறு 10 துளையுடைய ரண்ட தண்டினை நாருரித்துக் கண்டாற்போன்ற, அழகு இல்லாத மாமையினையும், குவளை மலரைப் போன்ற அழகு தங்கப்பெற்ற குளிர்ச்சியான கண்களையும், தேமற் புள்ளிகளையுடைய அல்குல் தடத்தினையும், பெருத்த தோள்களையும் கொண்டவள் இளமகளாகிய தலைவி. அவளிடத்தே நெருங்கச் சென்று, நம் வரவைப்பற்றிச் சொல்வாரைப் பெற்றிலமே! பெற்றனமானால், அவள், வந்துள்ள இவர்தாம் யாரோ?" என்று கேட்பாளும் அல்லள். சுரத்திடத்தேயுள்ள குமிழமரத்சினது வளைந்த மூக்கினையுடைய முற்றிய கனிகள் கீழே உதிர்ந்து, அவ்விடத்தே விளையாட்டயர்ந்திருக்கும் இளமான்களுக்கு உணவாக நிற்கும் இயல்புடையது, வல்வில் ரியினது கொல்லிக் கானம்! அக் கானத்தைப்போல நறு நாற்றத்தைக் கொண்டதாகியும். கரிய பலவாகித் தாழ்ந்த தன்மையதாகியும் விளங்கும் கூந்தலையுடைய அவள்தான்', அவர்கள் உரைத்து முடிப்பதற்கு முற்படவே, வந்துள்ளது யானென த் தெளிந்தாளாய்ப் பெரிதும் மயக்கத்தை உடையவளும் ஆவாளே! கருத்து: ' அவளிடம் சென்று என் வரவினை உரைத்து வருவாரைத்தான் யான் பெற்றிலேன்' என்பதாம். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/21&oldid=1627143" இலிருந்து மீள்விக்கப்பட்டது