உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

21


சொற்பொருள்: தூம்பு - துளை. கால் - தண்டு. மதன் அழகு. மழைக்கண் - குளிர்ச்சியான கண். திதலை- தேமற் புள்ளிகள். குறுமகள் - இளமகள். கொடுமூக்கு வளைந்த மூக்கு. மாற்கு-மானுக்கு. ஒலிவரல் - தழைத்துத் தாழ்தல். விளக்கம் : "மதன்இல் மாமமை' என் று சொன்னது, தன்னைப் பிரிந்திருத்தலால், அவள்பால் மாமை உள்ளதா யிருக்கும் என்பதுபற்றியாம். 'இவர் யார்?' என்குவள் அல்லள்' என்றது, அவளும் தன் நினைவோடு, தன் வரவை எதிர்பார்த்துத் காத்திருப்பாள் என்பதனாலாம். தலைவனது இப்பேச்சைக் கேட்கும் தோழி, தலைவியும் அவனைக் காதலிப்பதை அறிந்தவளாக, அவர்களைக் கூட்டுவிக்க முயல்வாள் என்பதாம். இறைச்சி : 'குமிழின் கனி மானுக்கு உணவாகும் தன்மைபோலத் தன் வரவு தலைவியின் கவலையைப் போக்கி இன்புறுத்தும்' என்பதாம். இதனால், தன் வரவு முன்னர்த் திட்டமிட்டிராத ஒன்று என்பதையும் தலைவன் உணர்த்தினனாம். 7. வானம் மின்னலிடும்! பாடியவர் : நல்வெள்ளியார். திணை : பாலை. துறை: பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டிடைக்கழிந்து பொருள்வயிற் பிரிய, ஆற்றாளாய தலைவிக்குத் தோழி சொல்லியது. (து-வி.) தலைவி அறத்தொடு நின்றதன் பின்னாக, வளை வரைந்து கொள்ளாது, வரைபொருளைக் குறித்து நெடுந்தொலைவுக்குத் தலைவன் பிரிந்து போயினான். அந்தப் பிரிவுக்கு ஆற்றாளாய் நலிந்தாள் தலைவி. அதனைக் கண்ட தோழி, தலைவன் குறித்த கார்காலத்தினது வரவைக் காட்டி, அவளைத் தெளிவிக்கின்றாள்.] சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்கப் பெருவரை அடுக்கத்து அருவி யார்ப்பக் கல்லலைத்து இழிதரும் கடுவரற் கான்யாற்றுக் கழைமாய் நீத்தம் காடலை யார்ப்பத் தழங்குகுரல் ஏறொடு முழங்கி, வானம் இன்னே பெய்ய மின்னுமால் - தோழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/22&oldid=1627144" இலிருந்து மீள்விக்கப்பட்டது