உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

நற்றிணை தெளிவுரை


வெண்ணெல் அருந்திய வரிநுதல் யானை தண்ணறுஞ் சிலம்பில் துஞ்சும் சிறியிலைச் சந்தின வாடுபெருங் காட்டே. தோழீ! மூங்கிலின் வெண்ணெல்லைத் தின்றதான வரிகள் பொருந்திய நெற்றியைக் கொண்ட யானையானது, தண்ணிதாக நறுமணங் கமழ்ந்து கொண்டிருக்கின்ற மலைப் பக்கத்திலே சென்று, தான் உறக்கங்கொள்ளும். சிறிய லைகளையுடைய சந்தனமரங்களும் கோடையால் வாடிப் போயிருக்கின்ற அத்தகைய பெருங்காட்டினிடத்தே - அச்சத்தை உடையதும், இடமகன்றதுமான சுனை யிடத்தே நீர் நிறையவும், பெரிதான மூங்கில்களைக் கொண்டுள்ள மலையடுக்கத்தே அருவிகள் ஆரவாரிக்கவும், கற்களைப் புரட்டிக் கொண்டதாக ஓடிவருகின்ற கடிதான நீர்வரத்தையுடைய காட்டாற்றினிடத்தே, கரையிலுள்ள மூங்கிலும் முழுகுமாறு செல்லும் வெள்ளத்தின் அலைக ளானவை, காட்டிடத்து எல்லாம் மோதி ஆரவாரிக்கவும், ஒலிக்கின்ற இடியேற்றோடும் முழக்கமிட்டதாக, வானமும் இப்பொழுதிலேயே பெய்தற்குத் தொடங்கினாற்போல மின்னா நிற்கின்றது. அதனைக் காண்பாயாக! கருத்து: "கார்காலம் தொடங்கியதாகலின், நின் காதலரும் தம் சொற்பிழையாராய் விரைய நின்னிடத்து வருவர்; அதனால், நின் துன்பமும் தீரும். நீ அதுவரை ஆற்றியிருப்பாயாக" என்பதாம். சொற்பொருள்: சூர் அச்சம். நனந்தலை - பரந்த டம். வரை - மூங்கில்; கழை - மூங்கில்; ஓடக்கோலும் ஆம். நீத்தம் - வெள்ளம். தழங்கு குரல் - முழங்கும் ஒலி. ஏறு இடியேறு. வெண்ணெல் வெள்ளை நெல்; மூங்கிலின் நெல். - விளக்கம்: 'தனக்கு வளத்தைத் தந்திருந்த மழையா னது தன்பால் வந்து அருளாமையினாலே, வாட்டமுற்றுக் கிடந்த மலைப்பக்கத்தின் கோடைக்காய்ச்சல் அகலுமாறு, வானத்தே கார்மேகம் மின்னலிட்டு இடியேற்றோடும் எழுகின்றது. அவ்வாறே பிரிவாலாகிய நின்னது பெரு வருத்தமும் அகலும்' என்று தேற்றுகின்றாள் தோழி. 'சூருடை நனந்தலை' என்றது. அணங்குகளையுடைய மலைப்பக்கம் என்பதனாலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/23&oldid=1627145" இலிருந்து மீள்விக்கப்பட்டது