உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

நற்றிணை தெளிவுரை


115. பேரன்பினர்!

பாடியவர் : ......
திணை : முல்லை.
துறை : பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி பருவங்காட்டி வற்புறுத்தியது.

[(து–வி.) பிரிதற்காலையிற் குறித்துச் சென்ற கார்ப் பருவத்தினது வரவைக் கண்டதும், தலைவியின் ஆற்றாமை மிகுதியாகின்றது. அவளைத் தேற்றுவாளாகத் தலைவனின் பேரன்பை எடுத்துக் கூறுகின்றாள் தோழி.]

மலர்ந்த பொய்கைப் பூக்குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண்இனிது படீஇயர்
அன்னையும் சிறிதுதணிந்து உயிரினள்;இன்நீர்த்
தடங்கடல் வாயில் உண்டுசில் நீர் என
மயிலடி இலைய மாக்குரல் நொச்சி 5
மனைநடு மௌவலொடு ஊழ்முகை அவிழக்
கார்எதிர்ந் தன்றால், காலை; காதலர்
தவச்சேய் நாட்டார் ஆயினும், மிகப்பேர்
அன்பினர் வாழி, தோழி! நன்புகழ்
உலப்பின்று பெறினும் தவிரலர்; 10
கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே?

தோழீ! பொய்கையிடத்து மலர்ந்திருக்கும் பூக்களை நாளும் கொய்ததன் தளர்ச்சியால் சோர்வுற்ற ஆயமகளிர் அனைவரும் இனிதாகக் கண்ணுறங்குமாறு, அன்னையும் சிறிது சினந்தணிந்து உயிர்ப்பான் ஆயினள். இனிதான நீர்மையினைக் கொண்ட பரந்த கடலினது நீரை வாயினாலே உண்டு. அதுவும் சிறிதளவான நீரே என்னுமாறு பொழியும் கார்மேகங்களும் வானத்தே எழுந்தன. மயிற்பாதம் போன்ற இலைகளைக் கொண்ட கருங்கதிர்களையுடைய நொச்சிப் பூவானது, மனையது நடுமுற்றத்துள்ள முல்லையோடுஞ் சேர்ந்து தம்பால் முகிழ்த்திருந்த மொட்டுக்கள் இதழவிழ்ந்து மலருமாறு கார்காலமும் இந்நாள் காலையிலே எதிர்ப்பட்டுள்ளது. காதலர் மிகவும் தொலைவான நாட்டிடத்தே உள்ளாராயினும், நின்பால் மிகப்பெரிதும் அன்புடையவராவர். நல்ல புகழினைக் கெடுதலன்றிச் சென்றுள்ளவிடத்தே பெற்றனராயினும், நம்பாற் கூறிச் சென்ற உறுதிமொழியினைத் தவிர்பவர் அல்லர். அவரது வரவை அறிவிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/227&oldid=1708220" இலிருந்து மீள்விக்கப்பட்டது