உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

நற்றிணை தெளிவுரை


தழை; நெறிப்பு – புத்திகமது சுருண்டு விளங்கும் மெருகு. பரிதிறந்து ஓடி – ஓடுதலிற் சிறப்பாக ஓடிச்சென்று.

விளக்கம் : நெய்தனிலத்து இளமகளிர் அலவனாட்டி மகிழ்தலை உடையராவர் என்பதனை, 'பொன்வரி அலவன் ஆட்டியஞான்றே' (குறு 303:7) என்பதனாலும், மற்றும் வருவன பிறவற்றானும் அறிக (குறுந். 316 5-6, பட். 101, நற் 363:10; ஐங் 197:1), பரி – நடக்கும் கதியுள் ஒன்று. 'சிற்றிலாடிய பருவத்தேயே காதலித்து உளநிறைந்த தலைவன் உடனுறையும் இல்லற வாழ்வில் நின்னைப் பிரியாதிருந்து இன்பந்தருதலை நாடினன் அல்லனென வருந்தினையோ' என்பதாம். இவற்றைக் கேட்கலுறும் தலைவன், தலைவியின் துயரத்தை மாற்றக் கருதுவானாகப் பிற்றை நாளிலேயே வரைந்து வருவான் என்பதும் ஆம்.

124. நீங்கல் ஐய!

பாடியவர் : மோசி கண்ணத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவற்கு உரைத்தது.

[(து–வி) தலைவனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, அவனது எண்ணத்தை மாற்றக் கருதினளாக, 'அவன் பிரியின் தலைவி பெரிதும் துயருறுவாள்' என, இவ்வாறு கூறுகின்றனள்.]

ஒன்றில் காலை அன்றில் போலப்
புலம்புகொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன்; அது தானும்வந் தன்று
நீங்கல்; வாழியர்; ஐய!—ஈங்கை
முகைவீ அதிரல் மோட்டுமணல் எக்கர்
நவ்பி நோன்குளம்பு அழுந்தென வெள்ளி 5
உருக்குறு கொள்கலம் கடுப்ப, விருப்புறத்
தெண்ணீர்க் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே.

துணைசேர்ந்த இரண்டனுள் ஒன்று அருகாமையிலே இல்லாத காலத்து, மற்றொன்றாகிய அன்றிலானது தனிமை தாளாதாய்ப் பெரிதும் வருந்தி இறந்து போய்விடும். அதனைப் போலத் தனிமையுற்று வாழ்ந்திருக்கும் சிறுமை கொண்ட வாழ்க்கையினை யானும் ஆற்றியிருந்து வாழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/243&oldid=1692142" இலிருந்து மீள்விக்கப்பட்டது