உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

271


மேற்கோள் : 'பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுப்பினும்' என்றபடி தலைவி கூற்று நிகழுவதற்கு இச்செய்யுளை இளம்பூரண அடிகள் உதாரணமாகக் காட்டுவர் (தொல். களவு. சூ. 99 உரை). 'அருளினும் அருளாளாயினும்' என்றமையால் கூட்டம் இன்மையும், 'பின்னிலை முனியல்' என்றமையால் இரந்து பின்னிற்பானாகத் துணிந்தமையும் தோழியிற் கூட்டத்து இயற்கைப் புணர்ச்சிக்கு ஒருப்பட்டமையும் உணர்க" எனவும் உரைப்பர்.

ஆசிரியர் நச்சினார்க்கினியர் 'தண்டாது இரப்பினும்' என்னும் துறைக்கு மேற்கோள் காட்டியுள்ளனர் (தொல். களவு 11 உரை).

141. யான் அமைகலன்!

பாடியவர் : சல்லியங் குமரனார்.
திணை : பாலை.
துறை : பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லிச் செலவு அழுங்கியது.

[(து–வி.) பொருள் தேடிவருதலின் பொருட்டாகத் தலைவியைப் பிரிந்து போவதற்குத் தூண்டிய நெஞ்சிற்குத் தான் முன்னர்ப் பெற்ற அநுபவத்தைச் சொல்லியவனாகத் தலைவன் போக்குத் தவிர்வதாக அமைந்த செய்யுள்.]

இருஞ்சேறு ஆடிய கொடுங்கவுள் கயவாய்
மாரி யானையின் மருங்கில் தீண்டிப்
பொரியரை ஞெமிர்ந்த புழற்காய்க் கொன்றை
நீடிய சடையொடு ஆடா மேனிக்
குன்றுறை தவசியர் போலப் பலவுடன் 5
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும்
அருஞ்சுரம் எளியமன் நினக்கே; பருந்துபடப்
பாண்டிலொடு பொருத பல்பிணர்த் தடக்கை
ஏந்துகோட்டு யானை இசைவெங் கிள்ளி
வம்பணி உயர்கொடி அம்பர் சூழ்ந்த 10
அரிசில்அம் தண் அறல் அன்ன இவள்
விரிஒலி கூந்தல் விட்டு அமை கலனே.

நெஞ்சமே! அரிதான சேற்றிடதே கிடந்து புரண்டதனால் மேனியெங்கணும் சேறு படிந்ததும், வளைந்த கவுளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/272&oldid=1693334" இலிருந்து மீள்விக்கப்பட்டது