உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

373


எம்மவர் அவனைப் பற்றிக் கொடுமை செய்வர்; அதனால் அவன் தேர் வறிதே மீளலும் உண்டாகலாம்; அங்ஙனம் நேர்வது காணின் எம்முயிர் நிலைத்தல் அரிது' எனவும் பொருள் கொள்ளலாம்.

192. எமக்கு ஏமம் ஆகும்!

பாடியவர் : ......
திணை : குறிஞ்சி.
துறை : இரவுக் குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.

[(து–வி.) இரவுக்குறி வந்தொழுகுவானாகிய தலைவனிடம், 'அவன் வரும் நெறியிடையே அவனுக்கு நேரக் கூடிய ஏதத்திற்கு அஞ்சினேம்' எனச் சொல்வதன் மூலம். இரவு குறியை மறுக்கின்றாள் தலைவி, அவளுக்குத் தலைவன் 'அதற்கு அஞ்சாதே கொள்' எனக் கூறித் தெளிவிப்பானாக இவ்வாறு கூறுகின்றான்.

'குருதி வேட்கை உருகெழு வயமான்
வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும்
மரம்பயில் சோலை மலியப் பூழியர்
உருவத் துருவின் நாள்மேயல் ஆரும்
மாரி எண்கின் மலைச்சுர நீளிடை 5
நீநயந்து வருதல் எவன்? எனப் பலபுலந்து
அழுதனை உறையும் அம்மா அரிவை!
பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப்
பூதம் புணர்த்த புதிதியல் பாவை
விரிகதிர் இளவெயில் தோன்றி அன்னநின் 10
ஆய்நலம் உள்ளி வரின் எமக்கு
ஏமம் ஆகும் மலைமுதல் ஆறே.

'இரத்தத்தைக் குடிக்கும் வேட்கையினாலே சினமிகுந்த வலிய ஒரு புலியேறானது, வளமிகுந்ததும் ஆற்றலுடையதுமான இளைய களிற்றினை எதிர்நோக்கியபடியே, புதரிடைப் பதுங்கியிருக்கும் கொடுமையினைக் கொண்டதும், மரங்கள் நிரம்பிய சோலைகளால் மலிந்திருப்பதும், பூழி நாட்டாரது நிறத்தையுடைய யாட்டு மந்தைகள் வைகறைப் போதிலே புல்லை மேய்வனவாகப் பரந்து விளங்குமாறுபோல மாரிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/374&oldid=1706931" இலிருந்து மீள்விக்கப்பட்டது