உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

375


அச்சமின்றி மேய்ந்திருக்கும் என்றது, அவ்வாறே துன்பங்கள் பலவும் சூழ்ந்திருப்பினும் தான் ஏதமின்றி வருதல் கூடும் என்பதற்காம்.

மேற்கோள் : தலைவியும் தோழியும் வருவழியருமை கூறியவழித் தலைவன் கூற்று நிகழுமென்பதற்குத் தொல்காப்பியக் களவியல் உரையுள் இச் செய்யுளை ஆசிரியர் நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டி, தலைவி ஆற்றினதருமை கூறியதற்குத் தலைவன் கூறியதென்று உரைப்பர்.

தொல் களவியல் சூத்திர உரையுள் (100) இச்செய்யுளை எடுத்துக் காட்டி, 'இந் நற்றிணைப் பாட்டுத் தலைவி ஆற்றினது அருமை செப்பத் தலைவன் செப்பியது' என்று இளம் பூரண அடிகள் உரைப்பர்.

'தலைவி கண்புதைத்தவழித் தலைவனுக்குக் கூற்று நிகழும்' என்பதற்கு, இச் செய்யுளை ‘வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்' என்னும் துறைக்கு மேற்கோளாகவும் எடுத்துக் காட்டுவர் இளம்பூரணர்.

பாடபேதம் : நாள்மேயல் பரக்கும், அழுதனள் உறையும், மாண்நலம்.

193. வருத்தாதே!

பாடியவர் :........
திணை : பாலை.
துறை : பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.

[(து–வி) தலைவன் பொருள்வயிற் பிரிந்தான்; குறித்த பருவத்து வாரானுமாயினான்; அதனால் தலைவியின் வருத்தம் மிகுதியாகின்றது. தன்னை மேலும் வருத்தும் வாடையை விளித்து அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

அட்டரக்கு உருவின் வட்டுமுகை ஈங்கைத்
துய்த்தலைப் புதுமலர்த துளிதலைக் கலாவ
நிறைநீர்ப் புனிற்றுப்புலம் துழைஇ ஆனாய்
இரும்புறம் தழூஉம் பெருந்தண் வாடை!
நினக்குத் தீதுஅறிந் தன்றோ இலமே! 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/376&oldid=1706934" இலிருந்து மீள்விக்கப்பட்டது