உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை 1—200 செய்யுட்களில்

பாடப்பெற்ற தலைவர்கள்


[எண் — செய்யுள் எண்]

அழிசி 87, 190

இவன் சோழர்க்கு உட்பட்டோனாகிய ஒரு குறுநிலத் தலைவன். ஆர்க்காடெனும் ஊரில் இருந்தவன். இவன் மகன் சேந்தன் என்பவன். இம் மகன் போராற்றல் மிகுந்தவன்; சோணாட்டு உறந்தையென்னும் தித்தனுக்குரிய ஊரைக் கைப்பற்றிச் சிறிதுகாலம் ஆட்சி செய்தவன்.

அன்னி 180

இவன் சோணாட்டு அன்னி குடியினனான ஒரு குறுநிலத் தலைவன். திருவழுந்தூரிலிருந்த திதியனோடு பகைகொண்டு எவ்வி அடக்கவும் அடங்கானாய்க், குறுக்கையென்னும் ஊரிடத்தேயிருந்த காவன்மரத்தை வெட்டி வீழ்த்தினான். குறுக்கைப் பறந்தலைப் போரிலே திதியன் அன்னியைக் கொன்று பழிதீர்த்துக் கொண்டான்.

ஆ ஆய் 167

இவன் பொதியிற் றலைவன்; ஆய் அண்டிரன் என்னும் பெயரினன். ஏணிச்சேரி முடமோசியாரால் பாடப்பெற்ற சிறப்பினன். இச் செய்யுளுள் இரவலர் பலரும் இவனிடத்தே வந்து தேர்களைப் பரிசிலாகப் பெற்றுச் சென்ற ஆரவாரம் உரைக்கப் பெற்றுள்ளது.

உதியன் 113

சேரர் மரபினன்; பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் எனவும் கூறப்படுபவன்; பாரதப் போருள் இருதிறத்துப் படையினர்க்கும் பெருஞ்சோறளித்த சிறப்பினன். முரஞ்சியூர் முடிநாகராயராற் பாடப்பெற்றவன். இவன் புதல்வர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். இச் செய்யுளுள் எயினந்தை மகனார் இளங்கீரனார் என்பார் இவனைப் பற்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/429&oldid=1731203" இலிருந்து மீள்விக்கப்பட்டது