உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

45


ஐயனே! ஓர் இளைய பரத்தை, தன் காதலனின் மார்பிடத்தே நேற்றிராக் கிடந்து உறங்கிய அடையாளங் களோடுஞ் செல்லக் கண்டேன். வண்டுகள் பாயப் பெற்று. வண்கடப்பம் பூக்களின் மணம் கமழ்ந்தபடி யிருந்த அவளது கூந்தல், கலவிக் காலத்துத் துவட்சியோடு அவளுடைய று புறத்திலே வீழ்ந்து அசைந்து கொண் டிருந்தது அவளுடைய இடையில் விளங்கிய மெல்லாடையும் தளர்ந்து அசைந்து கொண்டிருந்தது. செறிவான வளைகள் ஒலிமுழங்கக் கைகளை வீசிக்கொண்டவளாக, நீலப் பூப்போன்ற மையுண்ணும் கண்கள் சுழன்று நோக்கும் பார்வையைச் செய்ய. எம் தெருவூடே சென்றனள். விளங்கிய பூண்களுடன், நுண்ணிய பலவாகிய சுணங்குகள் அணியப் பெற்றவளாகத், தன் காதலனின் மார்பிடத்தே பெற்ற முயக்கத்திடையில் நெரிந்த சோர்கின்ற குழையையும் கொண்டிருந்தனள். பழம் பிணியாகிய காமநோய் தங்கிய ரட்டைத் தோள்களையும் உடைய வளாயிருந்தன்ள். குழைந்த மாலையினை அணிந்த பூங்கொடிபோன்ற அவள் தான் இன்றைக்கு அவனைத் தழுவிலள் போலும்! அற்தகையாளான ஓர் இளையோளைக் கண்டேன். பெருமானே! கருத்து: 'நினக்கு உரியவளாகிய அவள்பாலே நீயும் இனிச் செல்க' என்பதாகும். சொற்பொருள் : குறுமகள் - இளையோளாகிய பரத்தை; குறுமை - இளமை. மராஅம் - வெண்கடம்பு. கலிங்கம் - மெல்லிய ஆடை. தெளிர்ப்ப - ஒலிப்ப. ஞெமிர்ந்த - நெரிந்த. விளக்கம் : 'குறுமகள் கண்டிகும்' என்றது, அவள் தன்னைக் காட்டினும் இளமைப் பருவத்தினளாதலைச் சுட்டிக் கூறியதாம். மகிழ்நன்' எனத் தலைவனையே படர்க்கையிடத்து வைத்துக் கூறினள். 'வாழிய மடந்தை' என வாழ்த்தியது. 'என்னைப் போலப் பிரிவால் வருத்த முறாது, அவளாயினும் நின்னோடும் பிரியாத இன்பவாழ் வைப் பெறுவாளாக' என்றதாம். இரண்டாவது துறை : தோழி சொல்வதாகக் கொள்ளும்போது, இளம் பரத்தையின்பாற் கொண்ட காமங் காரணமாகத் தலைவன் தன்னைப் பிரிந்தான் என்று ஊடிய தலைவியிடத்தே. அவளாற் குறிப்பிடப்பெற்ற பரத்தை காமநுகர்வுக்கு. ஏலாத சிறுமி என்று கூறி, அவளது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/46&oldid=1627168" இலிருந்து மீள்விக்கப்பட்டது