உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

நற்றிணை தெளிவுரை


ஊடலைத் தீர்த்துத் தலைவனுடன் கூட்டுவிக்கின்றாள் என்று கொள்க, 1. காட்டுக் கோழி! பாடியவர்: மருதனிள நாகனார். திணை: முல்லை. துறை : வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகனுக்குச் சொல் லியது. ((து-வி.) அரசவினையை முடித்தற் பொருட்டகச் சென் றிருந்தான் தலைவன். அவ்வினையை முடித்த பின்னர் தன் நாட்டிற்குத் தேர்மீதமர்ந்தவனாகத் திரும்பிக் கொண்டிருக் கின்றான். காட்டுவழியாக வரும்போது, அவன் தன் பாக னுக்குச் சொலுவதுபோல அமைந்த செய்யுள் இது.] விரைப்பரி வருந்திய வீங்குசெலல் இளையர் அரைச்செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ வேண்டுஅமர் நடையர் மென்மெல வருக! தீண்டா வைமுள் தீண்டிநாம் செலற்கு ஏமதி வலவ, தேரே! உதுக்காண் உருக்குறு நறுநெய் பால்விதிர்ந் தன்ன அரிக்குரல் மிடற்ற அம்நுண் பல்பொறிக் காமறு தகைய கான வாரணம் பெயல்நீர் போகிய வியல்நெடும் புறவிற் புலரா ஈர்மணல் மலிரக் கெண்டி நாள் இரை கவர மாட்டித்தன் பேடை நோக்கிய பெருந்தகு நிலையே! 10 வலவனே! நம் படைமறவர், நம்மொடும் விரைவாக மிகுதியும் நடந்து வருதலினாலே பெரிதும் வருத்தமுற்றனர். அவர்கள். தம் அரைக்கண் செறித்துள்ள கச்சையின் கட்டை அவிழ்த்து, இடையிடையே தங்கி இளைப்பாறிக்கொண்டு, மெல்ல மெல்லத் தத்தம் விருப்பம் போன்று நடந்தவராக வருவாராக! உருக்குதல் பொருந்திய நறுமணமிக்க நெய்யிடத்தே, பாலைச் சிதறித் தெளித்தாற்போலத் தோன்றும் அழகிய நுண்ணிய பலவாகிய புள்ளிகளைக்: கொண்டதும், கடைகின்ற குரலை எழுப்புவதுமான மிடற்றையுடையது. காண்பார்க்கு விருப்பந் தருவதான காட்டுக்கோழியின் சேவல். அது, பெயலால் வீழ்ந்த மழை நீரானது போகிய அகன்ற நெடிய காட்டினிடத்தே, புலராத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/47&oldid=1627169" இலிருந்து மீள்விக்கப்பட்டது