உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

நற்றிணையின் மூலம் மட்டும். சைவசித்தாந்த மகாசமாசத்தாரால் வெளியிடப்பெற்ற சங்க இலக்கியத் தாகுதிகளில் அமைந்துள்ளது. சென்னை மர்ரே கம்பெனியார் வெளியிட்ட இலக்கிய வரிசையிலும் நற்றிணை மூலம் வெளிவந்துள்ளது. தமிழறிந்தார் அனைவரும் நற்றிணையின் நலத்தைக் கற்றறிந்து மகிழ உதவிய இவர்கள் அனைவருக்கும் நன்றியோடமைந்த வணக்கம் உரித்தாகும். இலக்கியங்களைக் கற்றுத் தெளிந்தோரும், இலக்கியம் கற்க விரும்பும் மற்றையோரும் நற்றிணை நயத்தை அறிந்து கொள்வதற்கு உதவியாக அமைக்கப்பெற்று வெளிவருவதே த் தெளிவுரைப் பதிப்பாகும். துறை விளக்கங்கள், தெளிவுரை, கருத்து விளக்கம். சொற்பொருள் மேற்கோட் குறிப்புக்கள், இறைச்சிப் பொருட்கள், விளக்கங்கள், பாடினோர் பாடப்பெற்றோர் வரலாற்றுக் குறிப்புகள் முதலியன அமைந்த பதிப்பும் இதுவாகும். இவை நற்றிணையின் செழுமையை நன்கறிந்து இன்புறுவதற்கு உதவும். நற்றிணையின் 1-200 செய்யுட்களைமட்டும் கொண்ட முதற்பகுதியின் மூன்றாம் பதிப்பு இப்போது வெளி வருகின்றது. இதன் முதலிரு பதிப்புக்களையும் வெளியிட்ட பாரி நிலையத்தினரே இப் பதிப்பையும் வெளியிடுகின்றனர். தமிழ்நலத்தின் பெருக்கத்துக்கு ஆவன செய்து மகிழ்வதில் சிறந்தோரான பாரி நிலையத்தின் உரிமை யாளர் திரு.க. அ. செல்லப்பனார் அவர்கட்கு என் நன்றி எப்போதும் உரியதாகும். தாள்விலையின் மிகுதியான ஏற்றமும், பதிப்புத் பன்மடங்கான துறைச் செலவினங்களின் ஏற்றமும் இதன் விலையைக் கூட்டியாக வேண்டிய நிலையினைத் தந்துள்ளன. இந்த விலையேற்றத்தை அன்பர்கள் பாராட்ட மாட்டார்கள் என்று நம்புகின்றேன். என்னையும் தமிழ்ப்பணியில் தூண்டிச் செலுத்திவரும் அன்னை பராபரையின் அடிமலர்களை வாழ்த்தி வணங்கி இதனைத் தமிழுலகுக்கு வழங்கி மகிழ்கின்றேன். வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நலம்! புலியூர்க் கேசிகன் 1-9-1990

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/6&oldid=1627115" இலிருந்து மீள்விக்கப்பட்டது