உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர் தமிழ் வாழிய! உலகின் மாந்தர் உணர்வினில் எழுந்தே ஒலியாய் எழுத்தாய்ச் சொல்லாய்த் தொடராய் வளர்ந்தெழில் கொழித்த வளமொழி பலவுள் தமிழே முதலெனச் சாற்றுதல் சாலும்! அந்நாள் முதலா இந்நாள் வரையும் இனியும் எழிலுடன் இயங்கும் ஈடிலா உயர்தனிச் செம் மொழி தமிழ்தான் என்பர்! இத்தமிழ் மொழியினில் ஈடிலாப் பற்றுடன் மெத்தவும் பேணியே மேன்மைகள் நிறைத்தோர் பண்டை நாளிலிப் பைந்தமிழ் நாட்டின் உரிமை மாந்தராத் திகழ்ந்தநம் முன்னோர்! அவருள் பாண்டியர் ஆன்றோர் அவையினை அமைத்துத் தமிழ்வளம் அமைவுறக் காத்தனர்! மொழிநலம் உயிரினும் மேலெனக் கொண்டே கடனெனக்கனித்தமிழ் காலம் வென்றுமே றலுடன் செழிக்கச் செயுட்கள் பலவும் சிதறிச் சிதைந்திடா வணம் தொகுத் தமைத்தே உதவியோர் ஒண்மைக் கொப்பில யாண்டும்! சங்கம் தொகுத்துத் தந்தவை தம்முள் எட்டெனும் தாகையுடன் பத்தெனும் பாட்டும் இன்றும் என்றும் ஈடில வாகும்! அவற்றுள் எட்டெனும் தொகையுள் ஒன்றே நற்றிணை நானூ றெனுமிந் நூலாம்! இதனைத் தொகுப்பித்தற் கேற்றன உதவியோன் பன்னாடு தந்தநற் பாண்டியன் மாறன் வழுதி என்னும் வண்மையன் ஆவன்! மறமாண் புடனிவன் மாத்தமிழ்ப் புலமையும் செறிமாண் பினனெனத் திகழ்ந்தன; இதனை இவன் செய் செயுட்களின் இனிமையிற் காணலாம்!

10 15 20 25 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/7&oldid=1626502" இலிருந்து மீள்விக்கப்பட்டது