உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

நற்றிணை தெளிவுரை


மரக்கலம் கவிழ்ந்து போனதாக, அதனாற் கலங்கியவராக ஒருங்கே கடலிடை வீழ்ந்த பலரும், ஒருங்கே பற்றிக் கொண்டு, இழுக்கும் பலகையொன்றைப் போல, நின்னைப் பலரும் சுவற்சி மிகுந்ததனாலே வெப்பமுடன் வீழ்கின்ற கண்ணீர்த் துளிகளுடனே, நீ வரவும், தாந்தாம் பற்றிக் கொண்டு தத்தம்முடன் வருமாறு இழுத்தனர். அதனாற் பெரிதும் வருத்தமுற்று நின்ற நின்னுடைய நிலைமையை அன்று யானும் கண்டேன். அங்ஙனம் கண்டிருந்தும், இன்று நீ யாரையும் அறியேன்' எனக் கூறும் இதற்கு யான் யாது செய்யற் பாலேன்!

கருத்து: 'நினது நிலையை யான் அறிவேன்; அதனால் என்னை ஏமாற்ற முயலுதல் வேண்டாம்' என்பதாம்

சொற்பொருள்: பண்பு - இன்னிசை மிழற்றும் அமைதி சீறியாழ் - சிறிய யாழ் ஏர் தரு - எழுந்தருளும். 'தெரு' என்றது, பரத்தையர் வாழும் தெருவினை. கவல் ஏமுற்ற கவற்சி மிகுதியாதலினாலே.

விளக்கம்: தோழி தலைவனைப் பழித்துக் கூறுதலின் தலைவன் மீண்டும் சூளுரைத்துப் பொய்ம்மை பாராட்டு வதனாலே வந்துறும் கேட்டிற்கு அஞ்சிய கற்பினளாய், அவனை ஏற்றுக் கொள்வாள் தலைவி என்க கடலில் கலங்கவிழ வீழ்ந்தோர் பலரும், அகப்பட்ட ஒரு பலகையை நாற்புறமும் பற்றிக்கொண்டு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி இழுத்து, முடிவிலே அனைவரும் நீரில் மூழ்கி அழிவர். அவ்வாறே, ப் பரத்தையரும் "நின்னைப் பற்றி உய்வதற்கு முயன்றும், இயலாதே பெருந்துயரில் ஆழ்ந்தனர். என்பதாம். அவரைச் சென்று காத்தருள்க எனக் கூறி வாயின் மறுத்ததும் ஆம்.

31. துறையும் கசந்ததடீ!

பாடியவர் : நக்கீரனார். திணை : நெய்தல். துறை: தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவி வன்புறை எதிர் அழிந்தது.

[(து.வி.) குறியிடத்தே தலைவன் வந்து, ஒரு சார் செவ்வி நோக்கிக் களவுறவை நாடினனாய்க் காத்து நிற்கின்றான். அவ் வேளையிலே. வேளையிலே. தோழி தலைவியின் வருத்தத்தை மாற்றக் சருதியவளாய்த் தலைவன் வருவான். நீ ஆற்றியிரு' எனக் கூறுகின்றாள். அதனைக் கேட்ட தலைவி, தன் ஆற்றாமை மீதூர அதனை அழித்துக் கூறுவது இது.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/63&oldid=1627185" இலிருந்து மீள்விக்கப்பட்டது