உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

85


மறத்தற்கு அரிதால் பாக! பல்நாள்

அறத்தொடு வருந்திய அல்குதொழில் கொளீ இய பழமழை பொழிந்த புதுநீர் அவல

நாநவில் பல்கிளை கறங்க, மாண்வினை

மணிஒலி கேளாள், வாணுதல்; அதனால்

'ஏகுமின்' என்ற இளையர் வல்லே

இல்புக்கு அறியுந ராக மெல்லென

மண்ணாக் கூந்தல் மாசறக் கழீ இச் சில்போது கொண்டு பல்குரல் அழுத்தி அந்நிலை புகுதலின், மெய்வருத் துறாஅ அவிழ்பூ முடியினள் கவைஇய

மடமா அரிவை மகிழ்ந்தயர் நிலையே.

5

10

பாகனே! பன்னாட்களாகக் கோடையின் வெம்மையோடு வாடிக் கிடந்தது இந்த உலகம். அது தீர்ந்து, உயிரினம் தத்தம் தொழிலை மேற்கொள்ளுமாறு, தொன்மைவாய்ந்த மழையும் இதுகாலைப் பெய்தது. பள்ளங்களிற் புதுநீர்

நிரம்பியுள்ளது, அதனை வாயெடுத்து உரைப்பவான பலவாய தவளைக் கூட்டங்கள் ஒலித்தலைச் செய்கின்றன. அதனாலே, மாண்பான தொழிற்றிறம் பொருந்திய தேர்மணி யின் ஒலியினையும் அவள் கேளாள். முன்னரும், இப்படித் தான் ஒள்ளிய நெற்றியினளான அவள் கேளாளாயினள்.

"முற்படச் சென்று நம் வரவைக் கூறுமின்' என ஏவப் பெற்ற இளைஞரும், விரையச்சென்று என் மனைக்கண் புகுந்து அறிவித்திருந்தனர். கேட்டதும், அதுகாறும் கழுவி ஒப்பனை செய்யாத தன் கூந்தலை மாசுதீர மெல்லக் கழுவத் தொடங்கினாள் அவள். கழுவியபின், சிலவாய மலர்களைப் பலவாய தன் கூந்தலிடத்துப் பெய்தவளாக முடித்துக் கொண்டும் இருந்தாள், அவ் வேளையிலே, யானும் சென்று வீட்டுள் நுழைந்தேன். என்னைக் கண்டதும், அவள் தன் ஒப்பனையை மறந்தாள். மேனி துவளக் கூந்தல் அவிழ்ந்து சோர வந்து என்னைத் தழுவித் திளைத்தாள். மடப்பத்தை யுடைய அவளது அந்தச் செவ்விய நிலை என்னாலே மறத்தற்கு அரிதாகும். அதனாலே விரையச் செல்வோமாக!

கருத்து: 'அந்தச் செவ்வியை இன்றும் யான் நுகருதற்கு ஏதுவாகத் தேரை விரையச் செலுத்துக' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/86&oldid=1627208" இலிருந்து மீள்விக்கப்பட்டது