உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

நற்றிணை தெளிவுரை


சொற்பொருள் : வறம் - கோடையின் வெம்மை. அவல். பள்ளம். வாள் - ஒளி. இளையர்-ஏவலிளையர். பல்குரல். பலவாக முடிக்கப்படுவதான கூந்தல். மகிழ்ந்தயர்தல்-இன் புற்று மயங்கித் தளர்தல்.

விளக்கம் : முன்னர் நிகழ்ந்த அதே நிகழ்ச்சியை இப் போதும் வேண்டுகின்றான் என்று கொள்க. மண்ணாக் கூந்தல்' என்றது, பிரிவுத்துயரத்தின் மிகுதியைக் கூறியதாம். 'நாவுடைமணி' என்றது, தவளைச் சதங்கைகளை. வறத் தொடு பொருந்திய உலகு தொழிற் கொளீஇய பழமழை பொழிந்த தன்மையைப் போன்றே, பிரிவுத்துயரால் அவளும் பெரிதும் வாட்டமுற்றுச் செயலொழிந்து கிடந்தாள். வருகைச் செய்தி கேட்டதும் தன்னைப் புனைந்து கொள்ளத் தொடங்கினாள்' என்று கொள்க.

மேற்கோள்: 'இது தானுற்ற இன்பத்தினைப் பாகற்குக் கூறியது' என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள்.சூ. 146 உரை.) இளம்பூரணனாரும், 'தானுற்ற இன்பத்தினைப் பாகற்குக் கூறுதற் கண்ணும்' என்னும் துறைக்கே மேற் கோள் காட்டுவர் (தொல். பொருள். சூ.144 உரை.)

பிறபாடங்கள் : 'அறத்தொடு வருந்திய அல்குதொழில் கொளீய; 'புதுநீர் அவல் வர'; 'நாவுடை மணியொலி' 'இல் புக்கு அறிவுணர்வாக,

43. உவகையும் அழிவும்!

பாடியவர் : எயினந்தையார். திணை : பாலை. துறை : பிரிவுணர்த்தப்பட்ட தோழி. தலைவனைச் செலவழுங்கு

வித்தது.

[ (து-வி.) தலைவியைப் பிரிந்து செல்லக் கருதுதலைத் தன்பாற் கூறக்கேட்ட தோழி, அதனால் தலைவிக்கு வந்துறும் பேரழிவைக் காட்டி, அவன் போக்கைத் தடுப்பது இது.1

துகில்விரித் தன்ன வெயில்அவிர் உருப்பின் என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன், ஓய்பசிச் நெந்நாய் உயங்குமரை தொலைச்சி ஆர்ந்தன ஒழிந்தன மிச்சில் சேய்நாட்டு அருஞ்சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/87&oldid=1627209" இலிருந்து மீள்விக்கப்பட்டது