உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

95


[(து-வி.) களவுக் காலத்தே பிரிந்து, அப்பிரிவையும் நீட்டிக்கச் செய்தான் ஒரு தலைவன். அவன் பின்னொரு நாள் வந்து, ஒருசார் தலைவியைக் காணுஞ் செவ்வியைத் தேர்ந்தானாக நிற்கின்றான். தோழி, அவன் உள்ளத்தைத் தலைவியொடு மணவினை நேர்தலிற் செலுத்தக் கருதினாள். தலைவிக்கு உரைப்பாள் போல. அவனும் கேட்குமாறு இவ்வாறு கூறுகின்றாள்.]

பெருங்களிறு உழுவை அட்டென, இரும்பிடி உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது நெய்தற் பாசடை புரையும் அம்செவிப்

பைதலம் குழவி தழீஇ, ஓய்யென அரும்புண் உறுநரின் வருந்தி வைகும்

கானக நாடற்கு, 'இதுஎன' யான்அது கூறின் எவனோ தோழி! வேறுஉணர்ந்து அணங்கறி கழங்கின் கோட்டம் காட்டி,

5

வெறிஎன உணர்ந்த உள்ளமொடு மறியறுத்து பொன்நேர் பசலைக்கு உதவா மாறே?

10

தோழீ! நின் மேனியிடத்துக் களவுக்காலத்து நேர்ந்த இந்தப் பிரிவுத்துயரினாலே வந்துற்ற வேறுபாட்டிை கண் டனள் அன்னையும். அதுதான் வேறொன்றாலே வந்துற்ற தெனவும் அவள் கருதினாள். தெய்வம் அணங்கிற்றாதலை அறிதற்குரிய கழங்கினிடத்தே. அம் மாறுபாட்டைக் குறித்துக் குறிகாணவும் நினைந்தாள். அதனைக் காரண மாகக் காட்டி, 'முருகை வேட்டு வெறியயரத் தீரும்' எனவும் நம்பினாள். அந்த நினைவோடு, ஆட்டுக் குட்டியை அறுத்துப் பலியிட்டு, முருகிற்கு வெறியும் அயர்ந்தாள். வெறிக்களத்தே, வேலன்பால் தோன்றிய முருகும், நின் பொன்னொத்த பசலை நோய் தீர் தற்கு உதவாமற் போதலைக் கண்டாள். அதன் பின்னர்ப் பெரிதும் கவலை யுற்றவள் ஆயினாள்.

புலியானது, தனக்குரிய பெருங் களிற்றைக் கொன்ற தனைக் கண்டது. அதன் கரிய பிடியானை ஒன்று. அதனால், வாடச்செய்யும் பிரிவு நோயாகிய வருத்தத்தோடு, தான் நின்ற இடத்தினின்றும் அகன்று இயங்குதற்கும் மாட்டா தாய், அது ஆயிற்று. நெய்தலின் பசுமையான இலையைப் போலத் தோற்றும் அழகிய காதுகளையுடையதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/96&oldid=1627218" இலிருந்து மீள்விக்கப்பட்டது