பக்கம்:நலமே நமது பலம்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


118 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

காயம் பட்டவர் கனமற்றவராக இருந்தால் ஒருவரே தூக்கலாம். இன்னொரு உதவியாளர் இருந்தால், நான்கு கை இருக்கையின் மூலம் பத்திரமாகத் தூக்கிச் செல்லலாம்.

1.2. காயம் பட்டவர் நடக்க முடியும் என்ற நிலையில் இருந்தால், அவரது பக்கவாட்டில் இருந்து ஒரு கையை அவரது இடுப்புப் பகுதியில் வைத்துப் பிடித்துக் கொள்ள, காயமடைந்தவர் தனது ஒரு கையால் பிடிப்பவரின் கழுத்துப் பகுதியைப் பற்றிக் கொள்ள, நடத்திச் செல்லலாம்.

1.3. இரண்டு முதலுதவியாளர்கள் இருந்தால், நாற்காலியில் உட்கார வைத்துத் தூக்குதல் போல, நான்கு கைகளையும் இருக்கையாக்கித்துக்கிச் செல்லலாம்.

1.4. காயமடைந்தவர் மயக்கமடைந்த நிலையில் இருந்தால், தூக்கும் கட்டிலில் படுக்க வைத்து, முகம் மேற்புறம் பார்த்திருப்பதுபோல வைத்து தூக்கிச் செல்லலாம்.

2. oadq=# &aa/#Jgh (Chest Injuries):

2.1. மார்புக் காயங்கள் எல்லாம் மிகவும் அபாயமானவை யாகும். மார்புக் காயங்களுடன், மார்பை சுற்றியுள்ள பகுதிகளிலும் வேறுபல காயங்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. -

2.2. பலமாகக் காயமடைந்தவர் மயக்கமடைந்திருந் தாலும், அல்லது பலமான உட்காயங்கள் ஏற்பட்டிருப்பதற் கான அறிகுறிகள் தென்பட்டாலும், தூக்குக் கட்டில் முறையைத்தான் பின்பற்றியாக வேண்டும். காயமடைந்த வரை மல்லாந்து படுக்கச் செய்யாமல், பக்கவாட்டில் ஒருக்களித்தவாறு படுக்க வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். -