பக்கம்:நலமே நமது பலம்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் - 123

14. வீட்டில் விபத்துக்களும் தற்காப்பு முறைகளும்

சுவையாக சாப்பிட, சுகமாக உறங்க, சொந்தபந்தங் களுடன் சந்தோஷமாகப் பேசி மகிழ, சொத்து சுகம் அனுபவிக்க, சண்டை சச்சரவுகள் போட்டுக் கொள்ள, சமாதானமாகி. மீண்டும் தொடர, இப்படி ஒரு இடமாக, சொர்க்கமாக விளங்குவது வீடுகள்தான்.

சகலவிதமான சம்பத்துகளும் வீட்டில் உண்டு என்றாலும், பகல் இரவு பாராமல் விபத்துக்கள் நடக்கின்ற இடமும் இல்லங்கள் தாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பாகும்.

சாலையிலும் வீடுகளிலும் மற்றும் பொது இடங்களிலும் நடக்கின்ற விபத்துக்களில், மூன்றில் ஒரு பங்கு வீடுகளில் தான் இடம்பெறுகின்றன. அதிலும் மொத்த விபத்துக்களைக் கணக்கிடும்போது, வீட்டு விபத்துக்கள் இரண்டாவது இடத்தைப் பெறுகின்றன.

வீட்டில் நடக்கும் விபத்துக்களை நாம் நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

1. தற்செயலாகத் தவறி விழுதல் (Falls).

2. 5mu1561 (Fires and Burns).

3. நச்சுணவும் நச்சுச் சூழ்நிலையும் (Poisioning). 4. மூச்சு முட்டலால் பாதிக்கப்படுதல் (Suffocation). இத்தகைய விபரீத விபத்துக்கள், வீட்டில் எங்கெங்கு நடக்கின்றன. எப்படி நடக்கின்றன என்று நாம் ஆய்வு செய்கிறபோது, நடைபெறும் முக்கிய இடங்கள்: 1.