பக்கம்:நலமே நமது பலம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

விடுகிறது. பயன்படுத்துகிற சாதனங்களைப் பழுதுபார்த்து வருவது பாதுகாப்பானதாகும். பயன்படுத்தாத மின்பொறி களை அணைத்துவிடுவது அல்லது பூட்டிவைப்பதும் சரியான பாதுகாப்பாகும்.

14.2.4. அவ்வப்போது மின் சாதனங்களை, பிளக், பட்டன் போன்றவற்றைப் பரிசோதனை செய்து தரமானதாக வைத்துக் கொள்ள வேண்டும்.

14.2.5, வீட்டில் இருப்பது போலவே வெளியிடங்களுக் குப் போகும்போதும். இப்படி எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். -

14.3. நச்சுணவு நச்சுச் சூழ்நிலை:

14.3.1. எல்லாவித மருந்துகளையும் மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் முக்கியமான மருந்துப் பாட்டில் களையும், பத்திரமான இடத்தில் பூட்டிவைத்திடவேண்டும்.

14.3.2. ஒவ்வொரு மருந்து புட்டியின் மீதும் அதன் பெயர் விவரம் பற்றி எழுதி, ஒட்டி வைத்துத் தெளிவாக்கிட வேண்டும். +

14.3.3. ஒவ்வொரு மருந்தையும் எவ்வளவு சாப்பிட வேண்டும்? எப்படிப் பயன்படுத்திடவேண்டும் என்பதையும் குறித்து வைத்திருக்க வேண்டும்.

14.3.4. பழசாகிப் போன, பயன்படுத்தாமல் விடுகின்ற மருந்துகளையும் மாத்திரைகளையும் எறிந்து விட வேண்டும் அல்லது அழித்து விடவேண்டும்.

14.3.5. கேஸ் சிலிண்டர், எரி வாயுக்கான குழாய்களின் இணைப்பு போன்றவை சரியாக தரமாக இருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்ப்பதும், ரிப்பேர் ஆனதைச் சரி செய்து விடுவதும், கேஸ் சிலிண்டரை காற்றோட்டமுள்ள இடத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/128&oldid=690935" இலிருந்து மீள்விக்கப்பட்டது