பக்கம்:நலமே நமது பலம்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


134 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

1. மாரடைப்பு நேர்ந்தவர்களுக்கு முதலில் பார்க்க வேண்டியது நாடித் துடிப்பைத்தான். மிகத் தெளிவாக நாடித் துடிப்பைப் பார்க்கச் சிறந்த இடம் கழுத்துப் பகுதிதான்.

ஏனென்றால் உடலின் எல்லாப் பகுதிகளின் திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கும் இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய் வடிவான இரத்தக் குழாயானது இதன் வழியாகத்தான் போகிறது. இப்படிப்பட்ட குருதிக் குழாய்கள் தடித்த சுவர்களும், நெகிழ்ச்சி மிகுந்த தசைப் பகுதியாலானவை.

இந்தக் குழாய்களில் வருகிற இரத்தம் ஒளிர்வுடைய சீரிய சிவப்பு இரத்தமாக இருக்கும். காரணம் என்ன வென்றால், நுரையீரல்கள் மூலமாக உயிர்க் காற்றைப் பெற்றுக் கொண்டு வருவதால்தான். -

இந்தக் குருதிக் குழாயில் கை வைத்துப் பார்த்தால் தெளிவாகத் தெரியும் என்பதால், எந்த இடம் என்பதையும் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் விரல்களைப் பாதிக்கப்பட்டவருடைய கழுத்தின் இடதுபுறம் தாடைப் பகுதி முடிகிற இடத்தின் கீழாக வைத்துப் பார்க்கவும். ஆவலால் அதிகமாக அழுத்திப் பார்க்கக் கூடாது. அங்கே நாடித்துடிப்பு இல்லை என்றால் அது கடுமையான மாரடைப்பாக இருக்கலாம் என்பதால் அதற்கேற்றபடி உதவியைத் தொடரவும். (கடுமையான மாரடைப்புப் பகுதியைக் காண்க)

2. இதயத் துடிப்பு மணிக்கட்டுப் பகுதியில் கூட நன்கு தெரியும். கையில் இருந்து மணிக்கட்டுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் வருவதும் உங்களுக்கு நன்கு தெரியும்.