பக்கம்:நலமே நமது பலம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

8.3. உடலின் வெப்பநிலை சாதாரணமாக 94.8 பாரன்ஹீட்டிலிருந்து 104 முதல் 115 வரையிலும் (40 முதல் 46 செல்சியஸ்) உயர்ந்து விடுகிறது என்றும் கணக்கிட்டு இருக்கின்றார்கள். *

8.4. சில மனிதர்களுக்கு வெப்பக் கதிரின் வெம்மையால், வியர்வை வழிவது நின்று போகும். அவர்களுடைய தோல் பகுதியானது வெப்பமாகவும் உலர்ந்தும் போய் விடுகின்றது.

8.5. இதனால் உடலிலும் மனதிலும் மிகு அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த அதிர்ச்சியைத் தொடர்ந்து உடலில் நடுக்கம் ஏற்படுகிறது. வலிப்பும் வந்து விடுகிறது. இதனுடன் தொடர்ந்து மயக்கம் (Coma) வந்துவிட, இந்த வெப்ப மயக்கத்தால் இறப்பும் ஏற்பட்டு விடுகிறது.

இவ்வாறு ஆட்பட்டுக் கொண்டு அவதிப்படுபவர் களை, அதிர்ச்சிக்கு உள்ளானவர்களை எவ்வாறு துயர் தீர்ப்பது, மீட்டுக் கொண்டு வருவது போன்ற முதலுதவி முறைகளை யும் இங்கே தெரிந்து கொள்வோம்.

இத்தகைய நிலைக்கு ஆளானவர்களை, சமநிலைக்குக் கொண்டுவர மருத்துவ உதவி உடனே தேவைப்படுகிறது. அவர்களது உடலுக்குக் குளிர்ச்சியைக் கொண்டு வருகிற முயற்சியில் உடனடியாக ஈடுபடுவது சாலச் சிறந்தது ஆகும்.

/. வெப்ப மயக்கத்திற்குரிய முதல் உதவிமுறைகள்

8.1.1. கடும் வெப்பத்தால் களைப்படைந்து வருந்துகிற வரை, குளிர்ந்த இடத்திற்குக் கொண்டு போக வேண்டும். அல்லது நிழல் இருக்கும் இடத்திற்காவது கொண்டு செல்ல வேண்டும். அவருடைய தாகத்தைத் தீர்க்க ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் தந்து காக்க வேண்டும். இவ்வாறு அவரது உடல்நிலையை சீர் செய்ய முடியாமல் போகிறபோது, மேலும் சிக்கல்கள் ஏற்பட்டு முழுமையாக மயக்கம் அடைந்து விடவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/148&oldid=690957" இலிருந்து மீள்விக்கப்பட்டது