பக்கம்:நலமே நமது பலம்.pdf/175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 173

தானாகவே அது இயற்கையான இரத்த நிறத்தைப் பெற்றுக் கொள்ளும். - -

தோல் உராய்வினாலும் இரத்தக் கொப்புளங்கள் ஏற்பட்டு, அதிலிருந்து இரத்தக் கசிவும் ஏற்பட ஏதுவாகும் நிலையுமுண்டு.

இரத்தக் கசிவானது எலும்புக்கருகில் அடிபட்ட சில நாட்கள் கழித்தும் ஏற்படும். அப்போது அது எலும் பு முறிவாகத்தான் இருக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். இதை உடனே மருத்துவரிடம் கூறி சிகிச்சைபெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இது அதிகக் குளறுபடிக்குக் கொண்டு வந்து கொடுமைகளை விளைத்து விடும்.

அடிவயிற்றுப் பகுதியில் இரத்தக் கசிவு ஏற்பட்டால், அது உட்புறக் காயத்தால் ஒழுகிவருவதாகும். இந்த நிலையில் அசட்டையாக இருந்திடக்கூடாது. வைத்தியரை அணுகவும்.

கண்ணில் பட்ட அடியால் கண்கள் கறுப்பாகி விடக்கூடிய காயமானது, மிகவும் கடுமையானது என்பதை மறந்து விடக்கூடாது. கண்ணுக்கு மேலே பட்ட அடியின் கடுமை அல்லது கண்களுக்கு இடையே பெற்ற தாக்குதல் காரணமாகக் கண்கள் கலங்கி விடுகின்றன. அதனால் கண்களுக்குள் பாதிப்பும் சேதமும் உண்டாகி, கண்களே பழுதுபட்டிருக்கின்ற நிலையைக் குறிக்கவே இதைக் கறுத்த கண் (Black eye) என்று கூறுகின்றார்கள்.

தலையில் பட்ட காயத்தாலும் கண்கள் பாதிக்கப் படலாம். இவற்றையெல்லாம் சாதாரண இரத்தக் கசிவுதானே என்று அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.