பக்கம்:நலமே நமது பலம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

நன்றாக ஓடித் தாண்டி, துள்ளிக் குதித்து, ஜிம்னாஸ்டிக்ஸ் செய்கிற ஒருவரை, சிறந்த உடல்நலம் உள்ளவர் என்று உரைத்திட முடியுமா?

முடியாது. வாழ்வில் ஏற்படுகிற சிக்கல்களை, பெருகி வருகின்ற பிரச்சினைகளை, எளிதாக, எடுப்பாக, முனைப் பாகத் தீர்த்துக் கொள்கின்ற முழு வலிமை உள்ளவர்களையே, மனவலிமை, உடல் வலிமை நிறைந்தவர்களையே உடல்நலம் உள்ளவர்கள் என்று கூறுகின்றார்கள். நாமும் கூறலாம.

தனிப்பட்ட பிரச்சினையோ அல்லது சமுதாயப் பிரச்சினையோ இரண்டில் எதுவாக இருந்தாலும், அல்லது சேர்ந்தே இருந்தாலும், அதனை முழுமையாக வெற்றி காண, உடல் நலமே உற்ற துணையாக உதவி நிற்கின்றது என்பதை மட்டும் நாம் உணர்ந்து கொண்டால் போதும்.

மாறிவந்த கொள்கைகள்:

ஓர் உயர்ந்த உன்னத நிலையை வாழ்வில் அடைய,

நலம் நிறைந்த உடலே ஒருவருக்குத் தேவைப்படுகிறது.

அப்படிப்பட்ட இலட்சியமும் முனைப்பும் நேரத்திற் கேற்ப, வாழ்வில் நிகழும் சந்தர்ப்பங்களுக்கேற்ப மாறி மாறியும் வரும்.

கீர்த்தி மிக்க கிரேக்கர்கள், கிறிஸ்து பிறப்பதற்கு முன்னதாகவே வாழ்ந்த வீர மக்கள், நலம் சார்ந்த உடலை, அழகுக்காக, காண மகிழ்ச்சிதரும் கவர்ச்சிக்காகப் பெற்றி ருத்தல் பெருமை என்று போற்றிக் காத்தவர்கள், பேரழகாக

உடலை வளர்த்துப் பெருமை கொண்டவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/18&oldid=690992" இலிருந்து மீள்விக்கப்பட்டது