பக்கம்:நலமே நமது பலம்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஆகவே உடல் நலம் என்பதை - வலிமையுடன் நெடுநாள் வாழ்வாங்கு வாழ்ந்து செயற்கரிய சேவையைச் Q&ti,6,151576it (To live most and serve best) 6T6arpsto BTib விளக்கம் தரலாம்.

இந்த விளக்கத்தில் இருக்கிற நுணுக்கமானது, உடல் உறுப்புக்களின் செழிப்பான இயக்கம். மனதின் நினைவுகளில் மணியான தெளிவான இயக்கம். இவ்விரண்டின் எழுச்சியான நிலையையே உடல்நலம் என்றும் அறிந்து கொள்ளலாம்.

மனித வாழ்க்கையின் முக்கியமான குறிக்கோளானது சமுதாயத்தில் சம வாய்ப்புப் பெறுவது. சந்தோஷமாக வாழ்வது. முடிந்தவரை பிறருக்கு உதவுவது.

இதுவே தரமான வாழ்க்கை என்பர். இதுவே தலைமைப் பேற்றைத் தந்து உயர்வுறச் செய்து உற்சாகம் பெறுகிற வாழ்க்கை.

வாழ்க்கையின் சவால்களைச் சந்திக்கிற, சமாளிக்கிற, சாமர்த்தியத்தைக் கொடுக்கிற உடல்நலத்திற்கு உதவி, உறுதுணையாக இருக்கும் சில சூழ்நிலைகளை அடுத்த பகுதியில் காண்போம். -