பக்கம்:நலமே நமது பலம்.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


224 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

10. பிறர் தண்ணிரில் மூழ்கும்போது அவரைக் காப்பாற்றத் தனியாகப் போய் மாட்டிக் கொண்டு, மீள முடியாமல் அழுந்தி விடுதல்.

11. தண்ணிரில் ஒருவர் தலைமுழுக மூழ்கியபடி எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கிறார் என்று பந்தயம் கட்டி விளையாடும்போது, அதுவே வினையாகிவிடுதல்.

பொதுவாக, நீந்தும்போது மேலே கூறிய நிகழ்ச்சிகளால் தான் விபத்துக்கள் நேர்கின்றன. நீச்சல் குளங்களில் உள்ளது போலவே இயற்கையான நீர்த் தேக்கங்களிலும், நீழ்ச்சுழி, நீரின் வேகம், ஆழம், கீழே பாசிகள் போன்ற புதர்ப் பகுதிகள், சேறுகள் இருக்கும். இவற்றைப் புரிந்து கொண்டு பாதுகாப்புடன் நீந்தி மகிழ வேண்டும்.

3. நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு முன்:

1. வயிறு நிறைய உண்டு விட்டுநீந்தச் செல்லக்கூடாது.

2. உடல் நலிவுற்று அதாவது உடல்நிலை சரியில்லாத போதும், களைப்பாக இருக்கும் போதும், மனநிலை சரியில்லாத போதும் நீந்தக்கூடாது.

3. தோல் வியாதி உள்ளவர்கள் மற்றும் கண் நோய், சீழ்க்காது உள்ளவர்கள், சளி பிடித்தவர்கள், சேற்றுப் புண் உள்ளவர்கள், தொற்று நோய் உள்ளவர்கள் யாரும் நீச்சல் குளத்தில் இறங்கவே கூடாது. (அவர்களை அனுமதிக்கவே கூடாது). -

4. வெட்டுப் புண் மற்றும் உடலில் காயம் உடையவர் களும் நீச்சல் குளத்தில் இறங்கக் கூடாது.

5. பெண்கள் தங்களது மாதவிடாய் காலங்களில் நீச்சல் குளத்தில் நீந்தக்கூடாது.